"பாலியல் தொழிலாளி போல.." திடீரென இந்தியாவிலிருந்து கிளம்பிய இங்கிலாந்து அழகி.. பகீர் குற்றச்சாட்டு
ஹைதராபாத்: இந்தாண்டு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே உலக அழகி போட்டியில் பங்கேற்க இந்தியா வந்திருந்த இங்கிலாந்து அழகி, திடீரென போட்டியில் இருந்து வெளியேறியிருக்கிறார். இதற்கு அவர் சொன்ன காரணங்கள் தான் பெரும் விவாதம் ஆகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி போட்டி நடைபெறும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்பார்கள். மிஸ் வேர்ல்ட் 2025 அழகி போட்டி இந்தாண்டு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் வரும் மே 31ம் தேதி நடைபெறுகிறது.

உலக அழகி
இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 1996 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் உலக அழகி போட்டி இந்தியாவில் நடந்துள்ளது. இப்போது மூன்றாவது முறையாக உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உளகெங்கும் இருந்து அழகிகள் ஹைதராபாத்தில் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே உலக அழகி போட்டியில் பங்கேற்க ஹைதராபாத் வந்திருந்த மிஸ் இங்கிலாந்து அழகி மில்லா மேகி திடீரென போட்டியிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளார். கடந்த 74 ஆண்டுகளில் உலக அழகி போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி இதுபோல வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். மேலும், அவர் இங்கிலாந்தில் வெளியாகும் தி சன் இதழுக்கு ஏன் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறித்தும் பேட்டியளித்துள்ளார்.
பழமையான காலத்தில் சிக்கிக்கொண்டனர்
உலகில் எதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனப் போட்டியில் பங்கேற்க வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் உலக அழகி போட்டி இன்னும் பழமையான காலத்தில் சிக்கியுள்ளதாகவும் பெண்களைக் குரங்குகளைப் போல நடத்தும் நிலையே போட்டியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், போட்டியில் நடந்த சில விஷயங்கள் தன்னை விபச்சாரியாக உணர வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அழகி போட்டியில் பங்கேற்கக் கடந்த மே 7ம் தேதி இந்தியா வந்த அவர், மே 16ம் தேதியே தாயகம் திரும்பிவிட்டாராம். பிரிட்டன் இதழுக்கு அவர் அளித்த பேட்டி இப்போது வெளியாகியுள்ள நிலையில், அது பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "உலக அழகி போட்டியில் பங்கேற்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள். ஆனால் அது நடக்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஓவர் ரூல்ஸ்
என்னைப் பொறுத்தவரை உலக அழகி போட்டி காலத்திற்கு ஏற்ப மாறவில்லை.. அது கடந்த காலத்திலேயே சிக்கிக் கொண்டது. என்னால் அதில் பங்கேற்க முடியாது" என்றார். மேலும், உலக அழகி போட்டியில் உள்ள சில கட்டுப்பாடுகளையும் அவர் விளக்கினார். அதாவது போட்டியாளர்கள் அனைவரும் 24*7 மேக் அப் அணிந்திருக்க வேண்டுமாம். காலை உணவு சாப்பிடும்போது தொடங்கி எல்லா நேரங்களிலும் பெரிய கவுன் அணிந்திருக்க வேண்டுமாம்.
அவர் மேலும் கூறுகையில், "இதெல்லாம் கூட ஓகே.. ஆனால், நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்த ஆண்களுடன் கட்டாயம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றனர். ஒவ்வொரு டேபிளிலும் 6 ஆண் விருந்தினர்களுக்கு இரண்டு பெண்கள் என அமர வைக்கப்பட்டனர். மாலை முதல் இரவு வரை அவர்களுடன் பேசி சிரிக்கச் சொன்னார்கள். இது நம்பமுடியாததாக இருந்தது. இது மிகவும் தவறு என்றே எனக்குத் தோன்றியது.
பாலியல் தொழிலாளி போல
இருந்தாலும் பரவாயில்லை என்று நான் ஒரு கட்டத்தில் அவர்களுடன் நான் எதற்காகப் போட்டியில் பங்கேற்க வந்தேன் என்பதை விளக்க முயன்றேன். ஆனால், அவர்களுக்கு அதில் எல்லாம் அக்கறை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அங்கு நடந்தவை என்னைச் சங்கடப்படுத்தியது.
நான் பணக்காரர்களின் பொழுது போக்காக இருக்கு உலக அழகி போட்டியில் பங்கேற்க வரவில்லை. ஆனால், அங்கு நடப்பதைப் பார்த்தால் உலக அழகி போட்டி காலாவதியானது போலவே தெரிந்தது. அது கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு நடந்தவை எல்லாம் என்னை ஒரு பாலியல் தொழிலாளி போல உணர வைத்தனர்" என்றார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications