பெண் இறந்தது தெரிந்தும் ரோட் ஷோ.. என்ன மாதிரியான மனுசன்? அல்லு அர்ஜுன் மீது ரேவந்த் ரெட்டி தாக்கு!
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் விவகாரத்தில் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினரையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. அல்லு அர்ஜுன் சில மணிநேரங்களே சிறையில் இருந்தார். உடனே நடிகர்கள் பலரும் அவரது வீட்டிற்குச் சென்று ஆதரவு சொல்கிறார்கள். அல்லு அர்ஜுனுக்கு அப்படி என்ன ஆகிவிட்டது? கண், கால், கிட்னி எதுவும் போய்விட்டதா என்ன? என கடுமையாகச் சாடியுள்ளார் ரேவந்த் ரெட்டி.
புஷ்பா 2 படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் இன்று காட்டமாக பேசியிருக்கிறார். புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது, தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால், அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். அவரது 9 வயது மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிருக்குப் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா சட்டசபை
தெலுங்கானா மாநில சட்டசபையில் இன்று புஷ்பா 2 பட ரிலீஸின்போது சிறப்புக்காட்சி பார்க்க வந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அக்பருதின் ஒவைஸி எழுப்பிய கேள்விக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று பதிலளித்துப் பேசினார்.
ரேவந்த் ரெட்டி பேசுகையில், "சம்பவம் நடந்த சந்தியா தியேட்டர் உள்ள பகுதி நிறைய ஹோட்டல்கள், தியேட்டர்கள் இருக்கும் பகுதி என்பதால், பாதுகாப்பு கருதி அங்கு வரவேண்டாம் என போலீசார் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் அங்கு சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம். தியேட்டருக்கு வெளியே ஒருவர் உயிரிழந்துவிட்டார். கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது என போலீசார் தெரிவித்த பிறகும், படத்தை முழுவதுமாக பார்த்த பிறகுதான் புறப்படுவேன் என அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.
ரேவந்த் ரெட்டி சரமாரி விளாசல்
சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் மகனும் பலத்த காயமடைந்தார். காவல் துணை ஆணையர், நீங்கள் புறப்படாவிட்டால் கைது செய்வோம் எனக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்த பிறகுதான் அவர் புறப்பட்டார். அப்போதும் வெளியே சென்று காரின் மேற்கூரையை திறந்து ரோடு ஷோ நடத்துகிறார். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்? அவர்களை பற்றி நான் எதுவும் சொல்லக்கூடாதா" எனக் காட்டமாகப் பேசியுள்ளார் ரேவந்த் ரெட்டி.
மேலும், "இந்த சம்பவம் தொடர்பாக, அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இரவு மட்டும் சிறையில் இருந்து மறுநாள் ஜமீனில் விடுதலையாகி வீட்டிற்கு சென்றார். அல்லு அர்ஜுன் சில மணி நேரமே சிறையில் இருந்தார். உடனே நடிகர்கள் பலரும் அவரது வீட்டிற்குச் சென்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர் வீட்டிற்கு சென்றபோதும் அவரை பார்க்க வரிசையில் பலர் நிற்கின்றனர். அல்லு அர்ஜுன் என்ன கை, கால்களை இழந்துவிட்டாரா?
தெலுங்கு திரையுலகினர் மீது தாக்கு
நாங்கள் யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு அவரை கைது செய்ததாக தகவல் பரப்புகிறார்கள். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை யாரும் சென்று பார்க்காதது துரதிர்ஷ்டவசமானது." எனக் கூறியுள்ளார்.
மேலும், ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, "உங்கள் தொழிலை நடத்தவும், உங்கள் திரைப்படங்களை எடுக்கவும், பணம் சம்பாதிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு ஊக்கத்தொகை, மானியங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும். ஆனால், ஒருவரின் கொலைக்கு காரணமான பிறகு, இனிமேல் உங்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்காது
இத்தனை வருடங்களில் சினிமா துறைக்கு டிக்கெட், விலை மற்றும் சிறப்பு காட்சிகள் என சலுகைகள் வழங்கப்பட்டு நன்றாக இருந்தது. ஆனால் இப்போது திரையுலகம் சாமானியர்களைக் கொல்லத் தொடங்கிவிட்டது. இனிமேல், நான் மாநில முதல்வராக இருக்கும் வரை திரைத்துறைக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைக்காது. நான் முதலமைச்சராக இருக்கும் வரை தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது" என ஆவேசமாகப் பேசியுள்ளார் ரேவந்த் ரெட்டி.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications