ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2024 தேர்தல்.. மொத்த கணிப்பும் “குளோஸ்”? தெலுங்கானாவில் ராகுல் காந்தி “பளார்” பதில் - பாஜக ஹேப்பிங்க

Google Oneindia Tamil News

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் தங்களுக்கு எந்த உறவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2024 லோக் சபா தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் தெலுங்கானாவின் அரசியல் களம் குதிரை பேரம், சந்திரசேகர் ராவின் தேசிய அரசியல் கட்சி, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையால் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது

ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது முதல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சிதான் அம்மாநிலத்தில் தொடர்ந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்தான் அங்கு தொடர்ந்து முதலமைச்சராக உள்ளார்.

நடிகைகள் மீது சபலம்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், சாரா அலிகானுக்கு தூதுவிட்ட சுகேஷ் சந்திரசேகர் நடிகைகள் மீது சபலம்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், சாரா அலிகானுக்கு தூதுவிட்ட சுகேஷ் சந்திரசேகர்

ஆபரேசன் சவுத்

ஆபரேசன் சவுத்

இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டியது. அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க ஆபரேசன் சவுத் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார்.

 டார்கெட் தெலுங்கானா

டார்கெட் தெலுங்கானா

இதன் தொடர்ச்சியாகவே அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்துக்கு தொடர்ந்து சென்று வருகின்றனர். அதே நேரம் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவோ பாஜக மீது கடும் விமர்சங்களை முன்வைத்து வருகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலின்போது தேசிய அரசியலில் நுழைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு தேசிய கட்சியையும் தொடங்கினார் அவர்.

குதிரை பேரம்

குதிரை பேரம்

ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏக்களான ரோகித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ், பாலா ராஜு ஆகியோருக்கு தலா ரூ.100 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 3 பேர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதற்கிடையே கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகா பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று ரங்காரெட்டி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடம் இல்லை.

 பாஜக ரிலாக்ஸ்

பாஜக ரிலாக்ஸ்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தான் ஒரு தேசிய கட்சியை நடத்தி வருவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார். சர்வதேச கட்சியை நடத்துவதாக அவர் நினைத்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம்." என்று விமர்சித்து உள்ளார். காங்கிரஸ், திரிணாமூல், திமுக, டி.ஆர்.எஸ், இடதுசாரிகள், என்சிபி, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் ராகுலின் இந்த பேச்சு பாஜகவுக்கே ஆறுதலாக அமைந்து இருக்கிறது.

English summary
Congress MP Rahul Gandhi said that, "There is absolutely no question of any relationship between Telangana Rashtra Samithi (TRS) and Congress. Telangana CM believes he is running a national party. He is welcome to think that he is running an international party."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X