ஒரே முகவரியில் வசிக்கும் தமன்னா, சமந்தா + ரகுல் ப்ரீத் சிங்? வாக்காளர் பட்டியலால் குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதிக்கு, நவ.11ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொகுதியின் வாக்காளர் பட்டியல் என்று ஒரு லிஸ்ட் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் 8/2 எண் கொண்ட வீட்டில் பிரபல நடிகைகளான தமன்னா, சமந்தா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் வசிப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதை போன்ற புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நவ.11ம் தேதி தொடங்குகிறது. அந்த தேதியில் சில மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடத்தப்பட இருக்கின்றன. அந்த வகையில் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் பதிவாகும் வாக்குகள் நவ.14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

Tamannaah Telangana Samantha

தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் + சமந்தா!

இந்நிலையில் இந்த தொகுதியின் வாக்காளர் பட்டியல் வெளியானதாக தகவல்கள் பரவின. இந்த வாக்காளர் பட்டியலின் ஒரு பகுதி சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் ஆகி வருகிறது. அதில் வீட்டு எண் 8-2-120/110/4 என்கிற முகவரியில் 35 வயதான ரகுல் ப்ரீத் சிங், 38 வயதான சமந்தா ரூத் பிரபு, 35 வயதான தமன்னா பாட்டியா ஆகிய பிரபல நடிகைகள் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் குறித்து தேர்தல் ஆணையத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பஞ்சாயத்துக்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இப்படி இருக்கையில், சோஷியல் மீடியாக்களில் ஷேராகி வரும் இந்த வாக்காளர் பட்டியல் புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் விளக்கம்

இந்த படங்கள் அனைத்தும் போலியானவை என்று, தெலங்கான மாநிலத்தின் உதவி தேர்தல் பதிவு அதிகாரி சையத் யாஹியா கமல் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறார். வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை பயன்படுத்தி இது எடிட் செய்யப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். பொதுமக்களை தவறாக பயன்படுத்தவும், அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணைய தகவல்களை தவறாக காட்டவும் மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்றும் இதை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உரிய நடவடிக்கை வேண்டும்

வாக்காளர் பட்டியல் குறித்து ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் இருக்கின்றன. குறிப்பாக பீகாரில் புதிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் உருவாக்கியிருந்தது. 2020 வாக்காளர் பட்டியலையும், 2025 வாக்காளர் பட்டியலையும் ஒப்பிடும்போது 65 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. இது குறித்து விளக்கம் கேட்டதற்கு, வெவ்வெறு முகவரியில் வசிக்கும் ஒரே நபர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் நீக்கப்பட்டிருப்பதால் இவ்வளவு எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலால் குழப்பம்

ஆனால், 65 லட்சம் வாக்காளர்களை போலி வாக்காளர்கள் என நீக்கியதற்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது. பீகாரின் சீமாஞ்சல் எனப்படும் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த பகுதி வங்கதேச எல்லையில் இருக்கிறது. இங்கு வாக்காளர் சரிபார்ப்பு பணியின்போது, முஸ்லிம் மக்கள் கொடுத்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எனவே, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக விடுபட்டிருக்கின்றனர் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பீகார் டூ பெங்களூர் வரை பஞ்சாயத்து

பீகாரில் மட்டும்தான் இந்த பஞ்சாயத்தா? என்றால் கிடையாது. பெங்களூரிலும் இதேபோல சர்ச்சை வெடித்து கிளம்பியது. அதாவது கலபுரகி மாவட்டம் ஆலந்த் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த பட்டியலில், குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில், அதாவது ஒரே முகவரியில் பலர் வசிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கள ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்டிருந்த நபர்கள் வசிக்கவில்லை.

மட்டுமல்லாது ஆன்லைன் மூலம் சுமார் 6000 வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், அவை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இப்படி இருக்கையில் பாலிவுட் நடிகைகள் ஒரே வீட்டில் வசிப்பதை போன்று வாக்காளர் பட்டியல் வெளியாகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+