தெலுங்கானா: சாதி சனத்தை நம்பி கமரெட்டி தொகுதியில் கேசிஆர்- மண்ணை கவ்வ வைக்க போவதாக காங். சபதம்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவ் வழக்கமாக போட்டியிடும் கஜ்வெல் தொகுதியுடன் இம்முறை கமரெட்டி தொகுதியிலும் களமிறங்குவதாக அறிவித்திருப்பதால் தேர்தல் களம் இப்போதே தகிக்கிறது.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் மட்டுமே பெண்கள். 115 வேட்பாளர்களில் 7 வேட்பாளர்கள் மட்டுமே புதுமுகங்கள். எஞ்சிய அனைவரும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள்.

முதல்வர் சந்திரசேகர ராவ், கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். இம்முறை கூடுதலாக கமரெட்டி தொகுதியிலும் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கமரெட்டி தொகுதி விஐபி தொகுதியாக உருவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பிஆர்எஸ் தொண்டர்கள், கமரெட்டி தொகுதியில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் கமரெட்டி தொகுதிதான் சந்திரசேகர ராவின் பூர்வீகம். இளம் வயதில் இங்குதான் வாழ்ந்தார். அவரது ரத்த உறவுகள் இங்குதான் உள்ளனர். கமரெட்டி தொகுதியின் மண்ணின் மைந்தன் சந்திரசேகர ராவ் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். மேலும் இத்தொகுதியில் தொடர்ந்து வென்று வந்த கம்பா கோவர்தனுக்கு வேறு ஒரு முக்கிய பதவியை தருவார் என்பது தங்களது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே கமரெட்டி தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவை வீழ்த்தி மண்ணை கவ்வ வைப்பேன் என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான முகமது அலி சபீர். இது தொடர்பாக சபீர் கூறுகையில், கமரெட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியையும் தோல்வியையும் நான் பெற்றிருக்கிறேன். என் மீது இத்தொகுதி மக்கள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். கஜ்வெல் தொகுதியில் தோற்கடிக்கப்படுவோம் என பயந்து போய்தான் சொந்தங்களை நம்பி கமரெட்டி தொகுதியிலும் சந்திரசேகர ராவ் போட்டியிடுகிறார். இங்கேயும் அவரை தோற்கடிப்பது உறுதி. இத்தொகுதியிலும் தோற்றுப் போகும் சந்திரசேக ராவ், அரசியலுக்கு வருவதற்கு முன் பார்த்து வந்த பாஸ்போர்ட் ஏஜெண்ட் போன்ற நிலைக்கு கீழே தள்ளப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications