அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. 10-15% ஊதியத்தை பெற்றோர் அக்கவுண்ட்டுக்கு அனுப்ப முதல்வர் பரிந்துரை! ஏன்?
ஹைதராபாத்: தெலங்கானா அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீத பணத்தை அவர்களின் பெற்றோர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப அம்மாநில முதல்வர் ரேவந்த ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், 3ம் பாலினத்வர்கள் மற்றும் முதியவர்களின் நலன் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தானசரி அனசுயா, பூனம் பிரபாகர், அட்லுரி லட்சுமண் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். தெலுங்கானா ரைசிங் - 2047 தொலைநோக்கு திட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் திருமணங்கள் தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்து, பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் அவர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளை முன்மொழிய வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அதேபோல் அங்கன்வாடி மையங்களில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு சத்தான உணவு மற்றும் முன் தொடக்கக் கல்வியை வழங்க வேண்டும். அதன்பிறகு குழந்தைகளை அங்கிருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் 3ம் பாலினத்தவர்களுக்கு அரசு பணி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, ஐடி மற்றும் பிற கார்ப்பரேட் பிரிவுகளில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பற்றிய விபரங்களை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பான முக்கிய பரிந்துரைகளை அவர் முன்வைத்தார். மாநிலத்தில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள் தங்களின் பெற்றோரை கைவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. வயது முதிர்வில் அவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. இதனை சரிசெய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
இதனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15 சதவீதத்தை அவர்களின் பெற்றோர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வயதான காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டம் ஏற்கனவே அசாம் மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ளது. இதனால் அந்த திட்டம் பற்றி ஆராய்ந்து அதேபோன்ற நடவடிக்கையை தெலங்கானாவில் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications