தெலுங்கானா: காங்கிரஸிடம் போராடி மன்றாடி ஒரே ஒரு தொகுதியை வாங்கிய பரிதாப இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கி உள்ளது. மேலும் சட்டசபை தேர்தலுக்கு பின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்.எல்.சி. இடங்கள் வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
நாடு விடுதலைக்கு முன்னரே தெலுங்கானாவில் இடதுசாரிகள் வேர்பிடித்து விஸ்வரூபம் காட்டினர். தெலுங்கானா தனி மாநில போராட்டமாகட்டும், ஆயுதப் போராட்டமாகட்டும் புரட்சிகளின் மைய அச்சாணியாக ஆந்திரத்து இடதுசாரிகள் இருந்தனர். காலம்தான் எத்தனையோ விசித்திரங்களை கொண்டு சேர்க்கிறது.

தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஒரே கட்டமாக வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலகியது. அத்துடன் 17 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தெலுங்கானாவின் 119 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கி உள்ளது காங்கிரஸ். அத்துடன் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் 2 எம்.எல்.சி. இடங்கள் தருவதாகவும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஒரே ஒரு தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டாலும் அக்கட்சியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் இந்த முடிவை கம்யூனிஸ்ட் கட்சி மறுபரிசீலனை செய்யும் எனவும் கூறப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications