விசாரணை பட பாணி.. போலீசே திட்டமிட்டு அரங்கேற்றிய திக் கடத்தல்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி - பின்னணி!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் திட்டமிட்டு போலீசாரால் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்தவர் பிரபல பத்திரிகையாளர் ரகு ராமகிருஷ்ணா. பல்வேறு பத்திரிகைகளில் இவர் அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். முக்கியமாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவிற்கும், ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு எதிராக கடுமையான விமர்சன கட்டுரைகள் பலவற்றை எழுதி உள்ளார்.
இந்த நிலையில்தான் இன்று நேற்று இவர் திடீரென கடத்தப்பட்ட சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காய்கறி
வெளியே காய்கறி வாங்க சென்ற ரகு ராமகிருஷ்ணா, வீட்டிற்கு வராத நிலையில், அவரை யாராவது கடத்தி இருக்கலாம் என்று அவரின் குடும்பத்தினர் சந்தேகித்து உள்ளனர். அரசுக்கு எதிராக எழுதி வருவதாக கட்சியினர் யாரவது கடத்தி இருக்கலாம் என்று ரகு ராமகிருஷ்ணா குடும்பத்தினர் அச்சத்தில் மூழ்கி இருந்தனர். இந்த நிலையில் அவர் வெளியே சென்று 3 -4 மணி நேரம் கழித்து, ராகு ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல் வெளியிட்டனர்.

மட்டம்பள்ளி
தெலுங்கானா மட்டம்பள்ளி போலீஸ் இவரை கைது செய்துள்ளனர். அரசுக்கு எதிராக இவர் தொடர் கட்டுரைகளை எழுதி வந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு சாதாரண கைது தானே இதில் என்ன அதிர்ச்சி என்று இருக்கிறது கேட்கிறீர்களா.. இவர் கைது செய்யப்பட்டது எப்படி என்பதுதான் விஷயமே.. இவர் கைது செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

காட்சி
வீட்டிற்கு அருகே இருக்கும் சாலையோர கடையில் இவர் பழம் வாங்கும் போது, அவரை சுற்றி 2 பேர், வேவு பார்ப்பது போல சாதாரண உடையில் நின்று இருக்கிறார்கள். ரகு ராமகிருஷ்ணா அருகில் அந்த 2 பேர் சென்றதும், வேகமாக ஒரு கார், அங்கே வந்து, இவரை கடத்துவதற்கு தயாராகிறது. கார் வந்தவுடன், ரகு ராமகிருஷ்ணா பின்னால் நின்ற இரண்டு பேரும், ராக ராமகிருஷ்ணாவை மடக்கி அப்படியே அவரை காருக்கு உள்ளே அமுக்கி தள்ளுகிறார்கள்.

சினிமா
முதலில் முரண்டு பிடிக்கும் ரகு, பின் வேறு வழியின்றி, காருக்குள் செல்கிறார். சினிமாவில் கடத்தல்கார்கள் கடத்துவது போல சாதாரண காரில் வந்து, சாதாரண உடை அணிந்து, போலீசாரே இப்படி பத்திரிக்கையாளர் ஒருவரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரகு ராமகிருஷ்ணாவை கடத்தியது போலீஸ்தான் என்பது உறுதியாகி உள்ளது. கடத்தி, மூன்று மணி நேரம் கழித்து, அவரை கைது செய்ததாக தெலுங்கானா போலீஸ் அறிவித்துள்ளது.

மோசம்
விசாரணை படத்தில் ஆந்திர செல்லும் தமிழ்நாடு போலீஸ் இதேபோல் கிஷோரை கடத்துவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அதே மாதிரி உண்மை சம்பவம் தற்போது தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. இந்த ரகு ராமகிருஷ்ணா கடத்தலுக்கான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பாணியில் நடக்கும் இந்த கடத்தல் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications