ஹீட்டர் போடும் போது வந்த போன் கால்.. இளைஞர் மின்சாரம் தாக்கி பலி! மக்களே இதை மட்டும் செய்யாதீங்க
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் செல்போனை உபயோகித்துக் கொண்டே வாட்டர் ஹீட்டரை தெரியாமல் கையில் எடுத்துவிட்டார். அப்போது அவரது கை எதிர்பாராதா விதமாக வாட்டர் ஹீட்டரில் இருந்த ராட்டில் பட்ட நிலையில், இதனால் அவர் மின்சாரம் தாக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒருவருக்குச் சாவு எப்போது எப்படி வரும் என்பது யாருக்குமே தெரியாது. மிகப் பெரிய விபத்தில் சிக்கிய கொஞ்சம் கூட காயம் இல்லாமல் தப்பித்தவர்களும் உள்ளனர்.

நல்லா இருந்தவர்கள் திடீரென எதிர்பார்க்காத வகையில் உயிரிழந்த சம்பவங்களும் இங்கே நடந்துள்ளன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் நடந்துள்ளது.
வாட்டர் ஹீட்டர்: இன்று காலை அங்கே 40 வயதான நபர் ஒருவர் தனது செல்ல நாயைக் குளிப்பாட்டத் தண்ணீரை வாட்டர் ஹீட்டர் மூலம் சூடாக்கி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அந்த வாட்டர் ஹீட்டரின் ராடை தொட்டுவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் உள்ள அனுமன் கோயில் அருகே வசித்த வந்தவர் தோனேப்புடி மகேஷ் பாபு.. இவர் நேற்று மாலை தனது செல்ல நாயைக் குளிப்பாட்ட ரெடியானார். இதற்காக அவர் வாட்டர் ஹீட்டரை போட்டு தண்ணீரைச் சூடு பண்ணி இருக்கிறார். தண்ணீர் சூடாகி இருக்கிறதா என்பதைப் பார்க்கப் போய் இருக்கிறார்.
உயிரிழப்பு: சரியாக அந்த நேரம் பார்த்து அவருக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. ஒரு கையில் மொபைலை எடுத்து யார் அழைக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டே தெரியாமல் தவறுதலாக மற்றொரு வாட்டர் ஹீட்டரின் ராட்டை மற்றொரு கையில் பிடித்துவிட்டார்.. அந்த ராட்டில் தான் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும்.
இதனால் அவருக்கு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய நிலையில், அவர் அப்படியே துடிதுடித்துச் சரிந்தார். அதைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா தேவி அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறிவிடட்னர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை மட்டும் செய்யாதீங்க: இங்கே அனைவருக்கும் போன் முக்கியம் தான். பல முக்கிய விஷயங்களை நாம் இப்போது போனில் தான் செய்கிறோம். ஆனால், மின்சாரம் சார்ந்த பொருட்களைக் கையாளும் போது, வாகன ஓட்டும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் மொபைலை தள்ளி வைப்பதால் எதுவும் ஆகிவிடாது. இந்த நபர் அதைச் செய்யாததாலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications