Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் மருத்துவர் 100க்கு போன் செய்திருக்கணும்.. சிஸ்டரை எதுக்கு கூப்பிடணும்.. தெலுங்கானா அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கால்நடை மருத்துவர் போலீஸுக்கு போன் செய்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார் என தெலுங்கானா அமைச்சர் முகமது மஹ்மூத் அலி தெரிவித்தார்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் கால்நடை மருத்துவராக இருந்தார். கொல்லத்தில் பணியாற்றி வந்த இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஷம்ஷாபாத் டோல்கேட் அருகே உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து காரிலோ அல்லது பேருந்திலோ கொல்லத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

இதை சிலர் கண்காணித்துள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை இரவு டூவிலரை எடுக்க வந்த அவர் வீடு திரும்பவில்லை என புகார் எழுந்தது. விசாரணையில் அந்த பெண்ணின் இரு சக்கர வாகனம் பஞ்சர் ஆனதை அங்கிருந்த லாரி டிரைவர் பார்த்துவிட்டு கூறியுள்ளார். உடனே அந்த வண்டியை கொடுங்கள் நான் பஞ்சர் போட்டு விட்டு வருகிறேன் என கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

அச்சமடைந்த பெண் மருத்துவர்

அச்சமடைந்த பெண் மருத்துவர்

அது வரை பெண் மருத்துவர் டோல்கேட்டின் பழைய அறை ஒன்றின் வெளியே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர் இந்த பெண்ணை சைகை காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அச்சமடைந்த பெண், தனது சகோதரிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி தன்னை சுற்றியுள்ளவர்களை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது என்றும் பயமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

உஷாரான கயவர்கள்

உஷாரான கயவர்கள்

அந்த பெண் போனில் பேசுவதை பார்த்துவிட்டு உஷாரான மூவரும் பெண்ணின் வாயை பொத்தி மறைவான இடத்துக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் பஞ்சர் போட வந்த லாரி டிரைவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணின் போன் இரவு 9.40 மணிக்கு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.

குற்றங்களை தடுக்க

குற்றங்களை தடுக்க

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா அமைச்சர் முகமது மஹ்மூத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் பெண் மருத்துவருக்கு நடந்த கொடூர சம்பவத்தால் வேதனை அடைகிறேன். போலீஸார் தற்போது எல்லா இடங்களிலும் எச்சரிக்கையாக செயல்பட்டு குற்றங்களை தடுக்கின்றனர்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

100 என்பது நண்பரின் எண்ணாகும். அந்த பெண் தனது சகோதரிக்கு போன் செய்ததற்கு பதிலாக 100-க்கு போன் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார். இந்த சம்பவத்தை வைத்தாவது மக்களிடையே நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தடுத்திருக்கலாம்

தடுத்திருக்கலாம்

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கூறுகையில் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர்கள் சம்பவம் நடந்தது யாருடைய எல்லையின் கீழ் வருகிறது என்பதை ஆராய்ந்து எனது மகளை கண்டுபிடிக்க தாமதப்படுத்திவிட்டனர். அவர்கள் மட்டும் சரியான நேரத்திற்கு விரைந்திருந்தால் அந்த சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+