தெலுங்கானாவில் அதிசய கிணறு.. 50 ஆண்டுகளாக நடக்கும் ஆச்சரியமான விஷயம்.. மக்கள் வியப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சரியாக 20 முதல் 30 வருடங்களுக்கு முன்பு வரை பலரும் கிணறுகளில் தான் தண்ணீர் எடுத்து பருகி இருப்பார்கள். பல இடங்களில் கிணறு தான் தாகம் தீர்த்து வந்தது. கிணறுகள் பொதுவாக ஒரு கட்டத்தில் வற்றிப்போகும். ஆனால் தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் உள்ள ஒரு கிணறு 50 வருடங்களை கடந்து இன்று வரை வற்றவே இல்லை.. ஆச்சரியமான கிணறு பற்றி பார்ப்போம்.

வீட்டுக்கு வீடு குடிநீர் பைப் மூலமாக விநியோகம் செய்யப்பட்டாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன்றும் கிணறுதான் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அப்படித்தான் தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் ராமகுண்டத்தில் இருக்கும் கிணறு, அந்த பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது.

Telangana well

மிகவும் சுவையான அந்த கிணற்று நீரை பலரும் குடிநீராக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது நல்ல தண்ணீரை நகராட்சி, ஊராட்சிகளே பைப் மூலம் வழங்குவதால், இந்த ஊற்று கிணறு பெரிதாக பயன்படுவது இல்லை... எனினும் ராமகுண்டம் மக்கள் அந்த கிணறை பொக்கிசம் போல் பாதுகாத்து வருகிறார்கள்.

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தில் உள்ள பிபவர் ஹவுஸ் சௌராஸ்தாவில் ஓ சாய் என்ற ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள மிகப்பெரிய நண்ணீர் கிணற்றுக்கு அற்புதமான வியப்பான வரலாறு இருக்கிறது. இந்த கிணற்றில் உள்ள நீரைத்தான் ராமகுண்டத்தை சுற்றியுள்ள 30 கிராம மக்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். சுமார் 30 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கிய இந்த ஊற்று கிணறு, இன்றும் பல வழிப்போக்கர்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

பல வருடங்ளுக்கு முன்பு பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் தங்கள் ஊரில் இருந்து சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் வழியாகவும், நடந்தும் வந்து இந்த ஊற்று கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிக்க பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் ஒருமுறை கூட கிணறு வற்றியதே இல்லையாம். சில சமயம் மட்டும் சேறு கிணற்றில் இருந்து எட்டி பார்க்கும் என்கிறார்கள்.

இந்த ஊற்று கிணற்றை ஹனுமய்யா என்பவர் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து கிணற்றின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு சிரமமின்றி தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அந்த கிணற்றில் பெரிய அரச மரம் ஒன்றிருந்தது. அந்த அரச மர கிணற்றை ராவி செட்டு உட பாவி என்று அழைத்து வந்துள்ளார்கள். இன்று பயன்படுத்தவில்லை என்கிற போதிலும், அந்த கிணற்றின் உரிமையாளரான சாய் ஹோட்டலின் மேலாளர் அப்சல். அவ்வப்போது சுத்தம் செய்து பராமரித்து வருகிறார்.

தெலுங்கானாவின் பல பகுதிகளில் இன்றும் கோடைக்காலம் வந்துவிட்டாலே பல கிராமங்களில் உள்ள ஊற்றுக் கிணறுகள் நீரின்றி முற்றிலும் வற்றி போய்விடும். மீண்டும் நல்ல மழை வரும் போது தான் தண்ணீர் ஊற்று உருவாகும். ஆனால் ராமகுண்டம் அரச மரக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் நிரம்பியே இருக்குமாம். இந்த தண்ணீரின் சுவை 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்ததோ அப்படியே இன்று வரை இருக்கிறதாம்.

இன்றைக்கு தண்ணீரில் சுவை ஏற்படுத்த எதை எதையோ கலக்குகிறார்கள். அதேபோல் ஆர்ஓவும் செய்யப்படுகிறது. அப்படி செய்து உருவாக்கப்படும் மினரல் வாட்டரை விட ராமகுண்டம் கிணற்றின் தண்ணீர் சுவையாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
இந்த கிணற்று தண்ணீரை வாகன ஓட்டிகள் பலர் குடித்து செல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+