பைக் விபத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் படுகாயம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
ஹைதராபாத்: தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் தரம் தேஜ்(34). தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகனான இவர் ஹைதராபாத்தில் மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
ஜூபிலி ஹில்ஸில் இருந்து காச்சிபவுளி என்ற இடம் நோக்கி சென்றபோது இரவு 8.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் சறுக்கி விபத்து நேரிட்டுள்ளது. இதனால் நடிகர் ர் சாய் தரம் தேஜசின் தலை, மார்பு, கை மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த அடிபட்டது.

உடனடியாக அவரை மீட்டு மெடிகோவர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாய் தரம் தேஜ் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார். குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மெகாஸ்டார் சிரஞ்சீவி, அவரது சகோதரரும் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சாய் தரம் தேஜின் இளைய சகோதரர் வைஷ்ணவ் தேஜ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மெடிகோவர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
நடிகர் சாய் தரம் தேஜ்ஸ், போர்ட்ஸ் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனியாக பைக்கில் சென்றாரா? அல்லது வேறு குழுவினர் அவருடன் பைக்கில் சென்றனரா? என்பதை அறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை சரிபார்த்து வருகிறோம் என்று மாதப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications