Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயோ.. ஒரே நேரத்தில் பிறந்த 2 குழந்தை.. மாற்றிய மருத்துவமனை? கதறிய பெற்றோர்.. சினிமா பாணியில் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை மாற்றி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் மன்செரியல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்னர் இரண்டு பெண்கள் வெவ்வேறு நேரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து முதலில் அனுமதியான மமதாவுக்கு பிரசவ பலி தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக அனுமதியான பாவனிக்கும் பிரசவ வலி அதிகரித்திருக்கிறது. பின்னர் இருவரும் பிரசவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் இவர்களால் இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. எனவே இருவருக்கும் சிசேரியன் நடத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். முதலில் மமதாவுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருக்கிறது. இதனையடுத்து சில நிமிடங்களில் பவானிக்கும் சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். பின்னர் மமதாவின் குடும்பத்தினரிடம் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றும், பாவனியின் குடும்பத்தினரிடம் பெண் குழந்தை பிறந்திருக்கிறது எனவும் கூறியுள்ளனர்.

பிரச்னை

பிரச்னை

எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது என்று இரண்டு குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனால் இங்குதான் பிரச்னையே தொடங்கியுள்ளது. அதாவது, மருத்துவமனையின் கவனக்குறைவால் எந்த குழந்தை முதலில் பிறந்த குழந்தை என்று சந்தேகம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மமதாவிடம் இருந்து ஆண் குழந்தையை மருத்துவர்கள் எடுத்துச்சென்றுவிட்டனர். இது குறித்து மமதாவின் உறவினர்கள் கேட்கையில் குழந்தை மாறி வந்துவிட்டது. உங்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை அல்ல பெண் குழந்தைதான் என்று கூறியுள்ளனர்.

 பெண் குழந்தை

பெண் குழந்தை

அதேபோல மறுமுனையில் பவானியிடமிருந்து பெண் குழந்தையை மருத்துவ ஊழியர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். பவானியின் உறவினர்கள் இது குறித்து கேட்டதற்கு உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறியுள்ளனர். இதற்கு பவானி தரப்பில் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், மமதா தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ ஊழியர்களிடம் சண்டையிட்டுள்ளனர். இந்த பிரச்னை பெரியதான வெடித்திருக்கிறது. மமதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இப்பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

அதாவது இரண்டு குழந்தைகளுக்கும் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர்களுக்குரிய பெற்றோர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளது. அதுவரை குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்த முடிவையும் மமதா தரப்பினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஏனெனில், மமதா ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டதன் காரணமாக அவருக்கு மருத்துவ ஊழியர்கள் குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்துள்ளனர். இது குறித்து அவரது கணவர் ரமேஷ் கூறுகையில், "எங்களுக்கு எந்த குழந்தை என்பது பிரச்னையல்ல. ஆனால் எனது மனைவிக்கு பிறந்த உண்மையான குழந்தை எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 டிஎன்ஏ பரிசோதனை

டிஎன்ஏ பரிசோதனை


பொதுவாக இதுபோன்று பெற்றோர்களை தவறவிட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்க இந்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு அவர்களுடைய மரபணுவில் உள்ள டிஎன்ஏ ஏறத்தாழ 99.9% ஒரே மாதிரியாகதான் இருக்கும். ஆனால் இந்த 0.1 சதவிகிதம் மட்டும் மாறுபட்டிருக்கும். இதன் மூலம்தான் உண்மையான பெற்றோர் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+