உலகை மிரட்டிய இந்திய பணக்காரர்! சுத்தம் இல்லாதவர்; பெரிய கஞ்சன்! மிரண்டு போன டைம்!
ஹைதராபாத்: உலகையே மிரட்டும் அளவுக்கு இந்தியப் பணக்காரராக ஒருவர் திகழ்ந்துள்ளார் என்ற தகவலை அமெரிக்க டைம் பத்திரிகை வெளியிட்டதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் மீர் உஸ்மான் அலி கான். இவ்வளவு கோடிகளுக்கு அதிபதியான இவர் சுத்தமே இல்லாதவர் என்றும் மிகப்பெரிய கஞ்சன் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்திய பணக்காரர் யார் என யாரேனும் கேட்டால் உடனே அம்பானி ஆரம்பித்து அதானி வரைக்கும் உள்ள பட்டியலை அப்படியே பலரும் சொல்லிவிடுவோம். ஆனால், அதுக்கும் மேல ஒரு மில்லினியர் இந்த இந்தியாவில் வாழ்ந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா, எலோன் மஸ்க் ஆகியோரை விட இவர் பணக்காரராக இருந்துள்ளார்.

அது மட்டுமல்ல, இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் இவர்தான். அதைத்தாண்டி தனக்கு என்று சொந்தமாக ஒரு தனியார் விமானத்தை வைத்தார் என்றால் உங்களால் வாயைப் பிளக்காமல் படிக்க முடிந்தால் அது ஆச்சரியம்தான்.
யாருப்பா அவரு? எனக்கே அவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கே என்றால், இதை நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த இந்தியப் பணக்காரர் பற்றி பல ஆச்சரியப்படத்தக்கத் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தப் பணக்காரர் பெயர் மீர் உஸ்மான் அலி கான். இவர் வேறு யாரும் இல்லை. இவர்தான் ஹைதராபாத் நிஜாம். அந்தக் காலத்தில் நிஜாம் உஸ்மான் அலியின் சொத்து அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% அளவுக்கு இருந்துள்ளதாக ஒரு மதிப்பீடு சொல்லப்படுகிறது. இந்த நிஜாம் உஸ்மான் அலி தான் உலகிலேயே பணக்காரராக இருந்துள்ளார்.
1937 ஆம் ஆண்டு டைம் பத்திரிகையில் மீர் உஸ்மான் அலி கானின் புகைப்படம் அட்டைப்படமாக வெளிவந்துள்ளது. அந்தளவுக்கு தனது புகழை அந்தக் காலத்திலேயே பரப்பி இருக்கிறார் இந்த ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம். அப்போது "இந்தக் கிரகத்தின் மிகப் பெரிய பணக்காரர்" என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
1940 களின் முற்பகுதியில் அவரது சொத்து தோராயமாக 236 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்டது என்று தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது. 1930கள் மற்றும் 1940களில், மிர் உஸ்மான் அலி கான் பல்வேறு வழிகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்தார். டைம்ஸ் நவ் அளித்துள்ள தகவலின்படி இவர் ரூ. 1000 கோடி மதிப்பிலான 185 காரட் அரிய ரத்தினமான ஜேக்கப் வைரத்தைக் காகிதங்கள் பறக்காமல் இருப்பதற்காக பேப்பர் வெயிட் ஆக பயன்படுத்தி வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
கார்கள் நிறுத்துவதற்காகவே ஒரு அரண்மனையே வைத்திருந்திருந்தார். அதில் கிட்டத்தட்ட 50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இந்த கார்களில் உலகப் புகழ்பெற்ற சில்வர் கோஸ்ட் த்ரோன் கார் ஒன்றும் இருந்துள்ளது. ஒரு தனியார் விமான நிறுவனத்தின் உரிமையாளராகவும் இவர் இருந்துள்ளார். தனக்கு என்று தனி விமனம் வைத்திருந்தார். மேலும் 400 மில்லியன் பவுண்டுகள் நகைகள்,100 மில்லியன் பவுண்டுகள் தங்கம், விலையை மதிப்பிட முடியாத கோஹினூர் வைரம் போன்ற பல வகையான வைரங்களை தனது அரண்மனை சேகரிப்பில் வைத்திருந்தார் இந்த ஹைதராபாத் கடைசி நிஜாம்.
இவர் உலகக் கோடீஸ்வரராக இருந்து என்ன பலன்? மாபெரும் கஞ்சனாக இருந்தார் என சொல்லப்படுகிறது. அதேபோல் கொஞ்சம் கூட சுத்தம் இல்லாதவர் என்று இவரைப் பற்றி வரலாறு சொல்கிறது. அது எந்தளவுக்கு என்றார் ஒரு வருடத்திற்கு ஒருமுறைதான் இவரது படுக்கை அறையை இவர் சுத்தம் செய்வாராம். பெரும் பணக்காரராக இருந்தபோதிலும், தனது விருந்தாளிக்கு பிஸ்கட் மட்டுமே விருந்து உபசரிப்பின் போது தருவாராம்.

இப்படி மீர் உஸ்மான் அலிகான் ஆட்சியைப் பற்றிப் பல வகையான மாறுபட்ட கருத்துகளை வரலாற்று ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர். இருந்த போதிலும், இவரது ஆட்சிக்காலத்தில் ஹைதராபாத் சமஸ்தானம் குறிப்பிடத்தக்கக் கட்டமைப்பை, நிர்வாக வளர்ச்சியை அடைந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இல்லை.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் இவர்தான். உஸ்மானியா பொது மருத்துவமனையைக் கட்டியவரும் இவர்தான். ஹைதராபாத் ஸ்டேட் வங்கியைத் திறந்தவர் இவர். கூடுதலாக, பேகம்பேட் விமான நிலையம், ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றை உருவாக்கி நிலைத்த புகழை அடைந்துள்ளார். ஹைதராபாத் நகரத்தில் வெள்ளம் வராமல் தடுக்க, உஸ்மான் சாகர், ஹிமாயத் சாகர், நிஜாம் சாகர் அணை ஆகிய அனைத்தையும் உருவாகின பெரிய ஆட்சியாளர் இவர்.
நிஜாம் உஸ்மான் அலி கான் பிப்ரவரி 24, 1967 அன்று தனது 80வது வயதில் காலமானார். நிஜாம் அலி கிங் கோதியில் உள்ள மஸ்ஜித்-இ-ஜூடியில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications