தேசிய அரசியல் கணக்கு.. சைஸாக என்ட்ரி கொடுத்த திருமாவளவன்.. ‘இனி எழுச்சிதான்’ - சிறுத்தைகள் உற்சாகம்!
ஹைதராபாத் : தெலங்கானா மாநில முதலமைச்சரும், டிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோருடன் இன்று காலை உணவருந்தினார் விசிக தலைவர் திருமாவளவன்.
தேசிய அளவிலான அரசியலில் கவனம் செலுத்திடும் முயற்சியில் இறங்கியுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதன் பெயரை இன்று அறிவிக்கவுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஹைதராபாத் சென்றுள்ளார். ஹைதராபாத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

தேசிய அரசியலில் கவனம்
2024 நாடாளுமன்றத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை சந்தித்து தொடர் ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, தேசிய அரசியலில் நுழைவது குறித்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கடந்த ஜூன் மாதம் முதலே ஆலோசனையில் ஈடுபட்டு வரும் சந்திரசேகர் ராவ், தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை மாற்றத் திட்டமிட்டுள்ளார்.

தேசியக்கட்சி
இந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது தேசிய கட்சியின் பெயரை தசரா பண்டிகையையொட்டி இன்று அறிவிக்கவுள்ளார். டிஆர்எஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தெலுங்கானா பவனில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு டிஆர்எஸ் தலைவர், தேசிய அரசியலை நோக்கி தனது திட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயரை பாரth ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) என மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் சென்ற திருமாவளவன்
இந்நிலையில், சந்திரசேகர் ராவ் அழைப்பின் பேரில் ஹைதராபாத் சென்றுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அவரை டிஆர்எஸ் கட்சி சட்டமன்ற கொறடா சுமன் ரெட்டி வரவேற்றார். தேசிய கட்சியைத் தொடங்கும் கேசிஆரின் அறிவிப்பு விழாவில் திருமாவளவன் பங்கேற்கிறார். ஹைதராபாத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

முக்கிய தலைவர்களைச் சந்தித்த திருமா
தெலுங்கானா மாநிலம் சென்றுள்ள திருமாவளவன் அங்கு பல்வேறு தலைவர்களையும் சந்தித்து வருகிறார். ஹைதராபாத்தில் ஆல் இந்தியா கன்ஃபெரேஷன் எஸ்.சி/எஸ்.டி தலைவர் மகேஸ்வரராஜ், திருமாவளவனை சந்தித்துப் பேசினார். மேலும், கேசிஆர் அழைப்பின் பேரில் ஹைதராபாத் சென்றுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியுடனும் திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

பிற மாநிலத் தலைவர்கள்
கேசிஆர் தொடங்கும் புதிய தேசியக் கட்சியான 'பாரத் ராஷ்ட்ரிய சமிதி' அறிமுக விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ள பிற மாநிலத் தலைவர்களை விசிக தலைவர் திருமாவளவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சந்திரசேகர் ராவ். அப்போது கேசிஆரின் மகனும் அமைச்சருமான என்.டி.ராமாராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கேசிஆருடன் காலை உணவு
இன்று காலை தெலுங்கானா முதல்வர் மாளிகையில், முக்கிய அரசியல் தலைவர்கள், நாடு முழுவதுமுள்ள விவசாய சங்கங்களின் நிர்வாகிகளுக்கு காலை சிற்றுண்டி அளித்தார் சந்திரசேகர ராவ். விசிக தலைவர் திருமாவளவன், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட தலைவர்கள் சந்திர சேகர் ராவுடன் இணைந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். பின்னர், அவர்கள் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தேசிய அரசியலில் திருமா?
விசிகவைப் பொறுத்தவரை தெலுங்கானா மாநிலத்திலும், கட்சிக்கு பொறுப்பாளர்கள் இருக்கின்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கிறார் திருமாவளவன். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், கே.சி.ஆரின் தேசியக் கட்சி தொடக்க நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்று, கேசிஆருடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது திருமாவளவனும் தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறாரா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

சிறுத்தைகள் உற்சாகம்
தமிழ்நாட்டில் சாதி கட்சி தலைவர் என்ற நிலையில் வைத்து விமர்சிக்க முடியாதபடி, அனைத்து மக்களுக்குமான தலைவராக உயர்ந்திருக்கிறார் திருமா. இப்போது பிற மாநில கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளிலும் முக்கியமான நபராக திருமாவளவன் மாறியுள்ளார். தென் இந்தியாவின் அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் பரிணாமம் அடைந்துள்ளார் என உற்சாகமாக சமூக வலைதளங்களில் விசிகவினர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications