அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர்.. கான்ஸ்டபிள் வேலையை தூக்கி எறிந்து விட்டு யுபிஎஸ்சியில் சாதித்த இளைஞர்
ஐதராபாத்: தெலுங்கானாவில் சர்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்தியதால் தனது போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை தூக்கி எறிந்துவிட்டு, சாதனை என்றால் இப்படி இருக்கனும் என சொல்வதற்கு எடுத்துக்காட்டாக தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதித்து காட்டியுள்ளார் தெலுங்கானா இளைஞர்.
தெலுங்கானா மாநிலத்தில் கான்ஸ்டபிள் ஆக பணி புரிந்து வந்த உதய் கிருஷ்ணா ரெட்டி (வயது 30) என்பவர், உயர் அதிகாரி அவமானப்படுத்தியதால் வேலையை தூக்கி எறிந்துவிட்டு தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வென்று அசத்தியுள்ளார். சாதனை என்றால் இப்படி இருக்கனும் என சொல்வதற்கு எடுத்துக்காட்டாக உதய் கிருஷ்ணா ரெட்டி, கல்வி என்னும் கருவியால் பெரிய உச்சத்தை எட்டி சாதித்து இருக்கிறார். இது குறித்த விவரம் வருமாறு:-

கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த உதய் கிருஷ்ணா ரெட்டி என்பவரும் தேசிய அளவில் 780 வது இடம் பிடித்தார். யுபிஎஸ்சி தேர்வில் வென்ற உதய் கிருஷ்ணா ரெட்டி முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
அரசு பள்ளியில் படித்தவர்: சாதாரண அரசு பள்ளியில் தெலுங்கு மீடியமில் படித்து இருக்கிறார் உதய் கிருஷ்ணா ரெட்டி. படித்து முடித்ததும் காவல்துறையில் வேலை கிடைத்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018- வரையில் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.
780 வது ரேங்க்: இதனால், மன வேதனை அடைந்த ரெட்டி, தனது போலீஸ் வேலையை உதறி தள்ளினார். நாமும் உயர் அதிகாரியாக மாறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்த ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் முழு வீச்சில் தேர்வுக்கு தயாராகி இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வை எழுதிய உதய் குமார் ரெட்டி இந்திய அளவில் 780 வது ரேங்க் எடுத்து சாதித்துள்ளார்.
ஒரு நாள் தவறை உணர்வார்: தனது இந்த சாதனை குறித்து உதய் கிருஷ்ணன் ரெட்டி கூறுகையில், " நான் யாரையும் பழிவாங்க போவது இல்லை.. எனக்கு கர்மா மீது நம்பிக்கை இருக்கிறது. என்னை அவமானப்படுத்திய சர்கிள் இன்ஸ்பெக்டர் தனது தவறை ஒருநாள் உணர்வார். உயர் அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை களைய நான் முயற்சிப்பேன்" என்று கூறியிருகிறாராம்..
சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரும் மோடிவேஷன் ஸ்டோரியாக உதய் கிருஷ்ண ரெட்டியின் சாதனை அமைந்துள்ளது. 780-வது ரேங்க் பெற்றுள்ள உதய் கிருஷ்ணா ரெட்டி, இந்திய வருவாய் சேவைக்கு நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்திய நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தேர்வு எழுதப்போவதாக உதய் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.
ஏளனம் செய்துகொண்டே இருப்பார்: யுபிஎஸ்சி தேர்வில் வென்ற உதய்குமார் ரெட்டி கூறியதாவது:- நான் போலீஸ் வேலையில் இருக்கும் போதே எனது ஓய்வு நேரத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்தேன். ஆனால் என்னை அவர் ஏளனம் செய்து கொண்டே இருப்பார்.
எனக்கு படிப்பதற்கு இடையூறு ஏற்படும் வகையில் டூட்டி கொடுத்து கொண்டு இருந்தார். ஒருநாள் கொஞ்சம் தாமதமாக வந்ததற்கு, சுமார் 60 போலீஸ் முன்னிலையில் என்னை கேலி செய்தததோடு.. பனிஷ்மண்டும் கொடுத்தார். எனது முன்னேற்றத்தை முடக்கவே அவர் விரும்பினார்" என்றார்.
நேற்று முன் தினம் வெளியான தேர்வு முடிவு: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளையும் நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதன்படி, கடந்த ஆண்டுக்கான அறிவிப்பில் 1,105 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய நிலையில், தேர்வு முடிவு, அதற்கு அடுத்த மாதமே வெளியானது.
தமிழ்நாட்டை சேர்ந்த 134 பேர்: அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த தேர்வு நடந்தது. அந்த தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 844 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 134 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 9 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அதிலும் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு 16 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதில் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்களின் பட்டியலையும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications