அத்தனை பேர் சுற்றிலும்.. கணவரை "துவைத்து காய போட்ட" தெலுங்கானா மனைவி.. 20 வயசு கம்மியா பொண்ணு வேணுமா
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளிவந்துள்ளது.. இந்த வீடியோ வைரலானதையடுத்து, இது தொடர்பான துரிதமான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது?
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் GHMC இணை ஆணையராக பணிபுரிபவர் ஜானகிராம். இவரது மனைவி பெயர் கல்யாணி.. தம்பதி இருவருமே தங்கள் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

சமீபகாலமாகவே ஜானகிராமனின் நடவடிக்கையில், கல்யாணிக்கு சந்தேகம் வந்துள்ளது.. இதனால், கணவனை கண்காணிக்க துவங்கியபோது, எந்நேரமும் போனில் இருப்பதும், யாருடனோ குழைந்து குழைந்து பேசிக் கொண்டிருப்பதையும் கல்யாணி கவனித்தார்.
அப்பார்ட்மென்ட் வீட்டில் ஆபீசர்
அப்போதுதான், இன்னொரு இளம்பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்தார். எனினும், கணவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று சமயம் பார்த்து காத்திருந்தார்.
இந்நிலையில், அப்பார்ட்மென்ட் ஒன்றில் குடியிருக்கும் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு தன்னுடைய கணவர் சென்றுள்ளதாக கல்யாணிக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதையடுத்து, நேரடியாகவே அந்த அப்பார்ட்மென்ட் வீட்டுககு சென்றுவிட்டார் கல்யாணி..
அங்கே கணவரையும், இளம் பெண்ணையும் கையும் களவுமாக பிடித்து விளாசினார்.
கல்யாணி செய்த கலாட்டாவில் அப்பார்ட்மென்ட்டிலிருந்த அத்தனை பேரும் திரண்டு வந்துவிட்டனர். இதனால், பரபரப்பான சூழல் அங்கு ஏற்பட்டது..
கல்யாணியின் கலாட்டா
ஆனாலும் கல்யாணி எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய ஆபீஸர் கணவரை, அடித்து வெளுத்தார். தன் கணவரை கண்மூடித்தனமாக, கல்யாணி துவைத்து எடுப்பதை பார்த்ததுமே, பயந்து போன அந்த இளம்பெண், ஒரு ரூமுக்கள் ஓடிச்சென்று கதவை பூட்டிக் கொண்டார்.. எனினும் கல்யாணி அந்த பெண்ணையும் விடவில்லை.. கதவை அடித்து நொறுக்கி, அந்த பெண்ணையும் வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து போட்டு தாக்கினார்.
இந்த விஷயம் அதற்குள் வாரசிகுடா போலீசுக்கு தெரிந்து, அப்பார்ட்மென்ட்டுக்கு விரைந்து வந்துவிட்டார்கள்.. பிறகு, ஆபீசர் உட்பட அனைவரையுமே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள்.. ஆபிசரிடம் விசாரணை ஆரம்பமானது.
வண்டவாளம் வெளியே வந்தது
அப்போதுதான் அவரது மொத்த வண்டவாளத்தையும் கல்யாணி வாரசிகுடா போலீசாரிடம் சொன்னார்.. தன்னுடைய கணவர் ஒவ்வொரு அலுவலகத்தில் பணிபுரியும்போதும், அந்தந்த இடங்களில் ஏதாவது ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், எப்போது பார்த்தாலும், பணிச்சுமை அதிகம் என்று சொல்லி, சிறிது காலம் வீட்டை விட்டு விலகி இருப்பதாகவும், மனைவி குற்றஞ்சாட்டினார்.
கடந்த காலத்தில் இப்படி பலமுறை, கணவனின் லீலைகளை கல்யாணி கண்டுபிடித்திருக்கிறாராம்.. என்றாவது ஒருநாள் திருந்துவார் என்று காத்திருந்து, இதுநாள் வரை ஏமாந்துவிட்டதாகவும், அதனால்தான் தற்போது கையும் களவுமாக பிடித்ததாகவும் கூறினார்.
தற்போது அப்பார்ட்மென்ட்டில் சிக்கிய இந்த இளம்பெண், ஆபீஸரைவிட 20 வயது குறைந்தவராம்.. மனைவியின் புகாரையடுத்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், அதற்குள் ஆபீசரை, அவரது மனைவி துவைத்து எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications