நம்பர் 22.. அடித்து சொன்ன ஜெகன் மோகன் ரெட்டி.. பிரதமரை முடிவெடுக்க போவதே இவர்தான்? கிங் மேக்கர்!
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசிய விஷயம் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே ஐ பாக் நிர்வாகிகள் முன்னிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார். அதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் 151 இடங்களை வெல்லும் என்று கூறினார்.

முக்கியமாக மக்களவைத் தொகுதியில் 22 இடங்களையும் கைப்பற்றும் என ஐ-பேக் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். தனக்கு கிடைத்த மாநில உளவு தகவல்கள் அடிப்படையில் அவர் இதை பேசியதாக கூறப்படுகிறது. அவரிடம் மாநில லோக்சபா தேர்தல் எண்ணிக்கை, சட்டசபை தேர்தல் எண்ணிக்கை மட்டும் சென்றுள்ளன. அதில்தான் இந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த உளவுத்துறை நம்பர் + ஐ பேக் நம்பர் இரண்டும் 22 இடங்களில் அந்த கட்சி ஆந்திர பிரதேசத்தில் வெல்லும் என்று கூறி உள்ளதாம். இதுதான் தற்போது தேசிய அரசியலில் அவர் கிங் மேக்கர் ஆகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி: ஆந்திர பிரதேச லோக்சபா தேர்தல் இந்த முறை பல விதமாக திருப்பங்களை சந்தித்து உள்ளது. மோடியை சீட்டில் இருந்தே அகற்றுவேன் என்று 2019ல் கூறி நாடு முழுக்க அலைந்து திரிந்து கூட்டணி வைக்க படாதபாடு பட்டவர் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு.
இப்போது இருக்கும் இந்திய கூட்டணிக்கு 2019லேயே இவர் விதை போட்டுவிட்டார். 2019ல் அவர் தந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஐடியா அப்போது தோல்வி அடைந்தாலும் இப்போது கூட்டணி ஒரு வகையில் செட்டாகிவிட்டது. ஆனால் இந்த இந்தியா கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இல்லை. மோடியை கடுமையாக எதிர்த்த அதே சந்திரபாபு நாயுடு இப்போது இருப்பது பாஜக கூட்டணியில் உள்ளார்.
பாஜக ஆந்திர பிரதேசத்தில் பிரம்மாண்ட கூட்டணியை வைத்துள்ளது. சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் + பாஜக + பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. தெலுங்கு தேசம் 17, பாஜக 6, ஜனா சேனா 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் அங்கே அதே இந்திய கூட்டணியை சிபிஐ, சிபிஎம் உடன் தொடர்கிறது. இங்கே ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி காங்கிரஸை வழி நடத்துகிறார் . எதிரே ஆந்திர முதல்வர் ஒய்ஏஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி கூட்டணி இன்றி 25 இடங்களிலும் போட்டியிடுகிறார்.
கிங் மேக்கர்: இந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தேர்தல் ரிப்போர்ட்கள் வர தொடங்கி உள்ளன. பாஜகவிற்கு 200- 220 இடங்கள் வரும். என்டிஏவிற்கு 250வரை மட்டுமே வரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்க எதிரணி கூட்டணியான இந்திய கூட்டணிக்கும் 220 வரை மட்டுமே வரலாம் என்றும் ரிப்போர்டுகள் வருகின்றன. அதாவது பாஜக எதிர்பார்த்த 370 - 400 இடங்கள் வர வாய்ப்பு இல்லை. பாஜக தனியாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. இந்தியா கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன.
இப்படி இருக்கத்தான் 2024 லோக்சபா தேர்தலில் தேர்தலுக்கு பின் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எந்த தேசிய கட்சிக்கு ஆதரவு கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யாருடன் கூட்டணி வைப்பார்: கடந்த லோக்சபா தேர்தலில் ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி 25 இடங்களில் 23 இடங்களில் வென்றார். அப்படி இருக்க இந்த முறையும் கூட ஜெகன் இரட்டை இலக்கங்களை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.
அப்படி இருக்க ஜெகன் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தேர்தலுக்கு பின் சந்திர பாபு நாயுடுவுடன் ஜெகன் கூட்டணியை முறிக்க வேண்டி இருக்கும். அதுவே காங்கிரஸ் உடன் ஜெகன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருந்தாலும் சகோதரி சர்மிளா உடன் ஜெகனுக்கு கடுமையான மோதல், கருத்து வேறுபாடு உள்ளது.
எதிரி சந்திராபாபு இருக்கும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா.. சண்டைக்கார சகோதரி சர்மிளா இருக்கும் காங்கிரஸ் உடன் சேர்வதா என்ற இக்கட்டான நிலை ஜெகனுக்கு இருக்கும். நாடாளுமன்றத்தில் தொங்கு சபை உருவாகும் பட்சத்தில்.. ஜெகன் மோகன் ரெட்டியும் 20+ இடங்களை வெல்லும் பட்சத்தில்.. அவர் யார் பக்கம் சாய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications