ஹைதராபாத் விமான நிலையத்தில் பெண்ணின் பையை திறந்து பார்த்தால்! அதென்ன ஹைட்ரோபோனிக் கஞ்சா?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் ரூ 40 கோடி மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரை போலீஸார் கைது செய்து, இவருக்கு வேறு யாருடனாவது தொடர்பிருக்கிறதா என்பதை விசாரணை செய்து வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமான நிலையப் பயணிகளிடம் வழக்கம் போல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பெண் ஒருவரின் இரு பைகளை சோதனை செய்த போது அதில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 40 கோடியாகும்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாங்காக்கில் இருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சாவை வாங்கி துபாய் வழியாக இந்தியாவுக்கு கடத்தினாராம். நேரடியாக பாங்காக்கில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்யும் இந்திய விமான நிலையங்களின் கவனத்தை திசைத் திருப்ப துபாய் சென்று அங்கிருந்து ஹைதராபாத் வந்தாராம்.
ஆனாலும் இங்கு நடத்தப்பட்ட சோதனையில் சிக்கினார். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கஞ்சா தாய்லாந்தில் அதிகம் வளர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த பெண்ணுக்கு தாய்லாந்து, இந்தியாவில் வேறு யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் விசாரணை செய்யப்படுகிறது.
ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பாங்காக்கிலிருந்து கடத்தி வரும் போது நிறைய பேர் சிக்கியதை அறிந்து அந்த பெண் துபாய் சென்றிருக்கிறார்.
ஹைட்ரோபோனிக் கஞ்சா என்றால் என்ன என்பதை பார்க்கலாம். தண்ணீரே இல்லாமல் வளமான மண்ணில் மட்டுமே வளர்க்கப்படுவதுதான் ஹைட்ரோபோனிக் கஞ்சா. இந்த கஞ்சா குறுகிய காலத்தில் அதிக மகசூலை தரும்.
இதை ஏசி அறைகள், எல்இடி விளக்கு கொண்ட அறைகள் உள்ளிட்ட இடங்களில் பயிரிடலாம். இது மண்ணில் வளர்க்கப்படும் கஞ்சாவை காட்டிலும் வீரியமிக்கது. இந்தியாவில் கஞ்சாவுக்கு தடை! அதே வேளையில் எந்தெந்த நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி என்பதை பார்க்கலாம்.
கனடா, அமெரிக்கா (மருத்துவ பயன்பாடு), உருகுவே, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளாகும். இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேஷியா, ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கஞ்சா பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.
கடந்த 23 ஆம் தேதி மும்பையில் 21 கிலோ மதிப்பிலான ரூ 21.55 கோடி கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக நவி மும்பையைச் சேர்ந்த நவீன் சிக்கார் என்பவரை கைது செய்தனர். தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவிலான கஞ்சாவை கொண்டு வரும் முக்கிய சப்ளையர் இவர்தான் என அறியப்படுகிறது.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications