"என்கிட்டேயே காசு கேட்பியா.". சேலையை வரிந்து கட்டி.. தூக்கிப் போட்ட ரேவதி.. கன்னத்தில் பளார் வேற!
டோல்கேட் ஊழியரை பெண் பிரமுகர் ஒருவர் தாக்கி உள்ளார்
ஹைதராபாத்: "என்கிட்டயே காசு கேட்பியா" என்று அரசியல் கட்சி பெண் பிரமுகர் ஒருவர் டோல்கேட்டில் பணம் கேட்டவரை அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது காஜா சுங்கச்சாவடி.. ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான டி.ரேவதி காரில் டோல்கேட் பக்கம் வந்துள்ளார்.. அந்த சுங்கச்சாவடியில் ஊழியர்கள் நின்றிருந்தனர்.. ஆனால், அவர்கள் கட்டணம் வசூலிப்பார்கள் என்று தெரிந்தும், டோல்கேட்டை கடக்க முயன்றார்.
#WATCH| YSRCP leader D Revathi slaps a toll plaza staff at Kaja Toll in Guntur district after she was stopped when she allegedly refused to pay toll tax #AndhraPradesh pic.twitter.com/NaHAzO6VDm
— ANI (@ANI) December 10, 2020
எனினும், ரேவதியின் காரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.. கட்டணமும் கேட்டனர்.. இதனால் ஆத்திரமடைந்த ரேவதி, "யார்கிட்ட பணம் கேட்கறீங்க? நான் யார்னு தெரியுமா, என்கிட்டயே வசூலிப்பீங்களா?, என் வண்டியை முதலில் அனுப்புங்க" என்று கேட்டு, ஊழியர்களை சரமாரியாக திட்டினார்..
ஒருகட்டத்தில் காரை எடுத்து செல்ல முயன்றபோது, ஊழியர்கள் அதற்கு குறுக்கே தடுப்புகளை வைத்தனர்.. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ரேவதி, ஊழியர்களில் ஒருவரின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.. இறுதியில் அடாவடியாக அந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு , ஊழியர்களையும் தாக்கிவிட்டு தன்னுடைய காரை ரேவதி எடுத்து செல்கிறார்.
டோல்கேட் ஊழியர்கள் அவரை தடுக்க முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை... இறுதியில் பேரிகார்டை தள்ளிவிட்டு, ஊழியர்களையும் தாக்கிவிட்டு தன்னுடைய காரை ரேவதி எடுத்து சென்றுவிட்டார். ரேவதி அந்த நபரை அடித்த காட்சிதான் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன... இதுதொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கட்சியில் பிரபலமாக உள்ள பெண், அதுவும் மக்களின் பிரதிநிதி, இப்படி அராஜகத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications