அஸ்ஸாமில் மீண்டும் இனமோதல்- போடோ தீவிரவாதிகள் தாக்குதலில் 2 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 10 பேர் பலி!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தின் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு கோக்ராஜ்கர் மாவட்டத்தில் போடோ பழங்குடி இனத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பெரியளவிலான மோதல் நடந்தது. இந்த நிலையில் மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது.
கோக்ராஜ்கரின் துல்சிபில் என்ற பகுதியில் நேற்று இரவு போடோ தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழுவினர் முஸ்லிம்கள் வாழும் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
அதற்கு முன்னதாக அதே பகுதியில் மூன்று முஸ்லிம்களை போடோ தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலியானோரில் 2 பேர் குழந்தைகள், 4 பேர் பெண்கள். போடோ தீவிரவாதிகளின் அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆயிரம் துணை ராணுவப் படையினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசை அஸ்ஸாம் மாநில அரசு கேட்டுக் கொண்டது.
தற்போது பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாஜகவுக்கு போடோ இயக்கம் ஆதரவு
இதனிடையே போடோலாந்து மக்கள் முன்னணி என்ற மற்றொரு இயக்கம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் மூத்த தலைவர் பிரமில்லா ரானி பிரம்மா கூறுகையில், அஸ்ஸாம் மாநிலத்தின் 14 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் 5 இடங்களைத்தான் வெல்ல முடியும். அந்த அளவுக்கு மாநில அரசு மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார். இந்த போடோ மக்கள் முன்னணி கோக்ராஜ்கர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications