ஆன்லைனில் ஆர்டர் செய்த "கேக்"கால் பறிபோன பிஞ்சு உயிர்.. பிறந்த நாள் கொண்டாடியபோது சோகம்!
அமிர்தசரஸ்: பிறந்த நாளை ஆனந்தமாக கேக் வெட்டி கொண்டாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி அந்த கேக்கை சாப்பிட்டதாலேயே உயிரிழந்த சோக சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது. ஆன்லைனின் ஆர்டர் செய்து கேக் கெட்டுப்போய் இருந்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
தற்போது ஆன்லைனிலேயே உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் நடைமுறை வந்துவிட்டது. வீட்டில் இருந்தபடியே உணவகத்தை தேர்வு செய்தால் போது பிடித்த உணவு அடுத்த அரை மணி நேரத்தில் நம் வீட்டுக்கு வந்துவிடும்.

நேரம் மற்றும் அலைச்சல் தவிர்க்கப்பட்டாலும், ஒருசில நேரங்களில் கெட்டுப்போன உணவுகள், பல்லி விழுந்த உணவுகள் அனுப்பப்பட்டு விடுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்காமல் இல்லை. இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகும் செய்திகளும் பரவாமல் இல்லை. அந்த வகையில் தான், பேக்கரியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பஞ்சாப்பில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா அருகே குடும்பத்துடன் வசித்து வரும் சிறுமி மான்வி. 10 வயதே ஆன மான்வி கடந்த 24 ஆம் தேதி தனது 10 - வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் என்றாலே கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்வது தானே வழக்கம். அந்த வகையில் சிறுமியும் தனது தந்தையிடம் கேக் கேட்டுள்ளார்.
அவரும் பட்டியாலாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஆன்லைன் மூலமாக கேக்கை ஆர்டர் செய்துள்ளார். சரியாக 7 மணிக்கு சிறுமி மான்வி தனது தாத்தா ஹர்பன் லால், தந்தை, சகோதரி ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் ஒவ்வொருக்கும் வாயில் கேக்கை ஊட்டி விட்டார் சிறுமி மான்வி. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதை வீடியோவும் அவர்கள் எடுத்துள்ளனர்.
பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கேக்கை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டு இருந்த நிலையில், சிறிது நேரத்தில் சிறுமி மான்விக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. தாத்தாவிடம் எனக்கு அசவுகரியாமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். சிறுமிக்கும் தொண்டை வறண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதேபோல் குடும்பத்தினரும் மாறி மாறி வாந்தி எடுத்துள்ளனர். இதனால் கேக் சாப்பிட்டதாலேயே இப்படி ஆகிறது என்பதை உணர்ந்தனர்.
இதையடுத்து மறுநாள் காலை சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும் சிறுமி மான்விக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. தொடர்ந்து சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கேக் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் கெட்டுப்போனதாலும், அந்த கேக்கை சாப்பிட்டதாலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாக அவளது தாத்தா கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும், கேக் கெட்டுப்போனதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கேக்கின் மாதிரிகள் ஆய்வு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நவீன காலத்தில் எல்லாமே ஆன்லைன் மையமாகிவிட்டது. முன்பெல்லாம் கடைக்கு சென்று கையால் தொட்டு பார்த்து, அதன் குவாலிட்டி தன்மையை உறுதி செய்து நமக்கு தேவையானவற்றை வாங்கி வந்தோம். ஆனால் இப்போதைய காலத்தில் செல்போனிலேயே அந்த பொருள் எப்படி இருக்கிறது, அதன் ஸ்டார் ரேட்டிங்க் எவ்வளவு என்பதை பார்த்து வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து விடுகிறோம்.
இப்படி ஆர்டர் செய்யும் போது ஒரு சில நேரம் தரமற்ற பொருட்களும் வந்துவிடுவதாக புகார்கள் வருகின்றன. எனினும் ரீப்ளேஸ்மெண்ட் வசதி இருந்தாலும் உணவு பொருட்களில் இந்த வசதியை நாம் பயன்படுத்த இயலாது. எனவே உணவு பொருட்களை ஆர்டர் செய்யும் போது கூடுதல் கவத்துடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications