பாலியல் வன்கொடுமை செய்த கயவன்.. வரைபடமாக வரைந்து காட்டிய சிறுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை 10 வயது சிறுமி வரைபடமாக வரைந்து வெளியிட்டார். அதில், சிறுமியின் உறவினரே கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி, குடும்ப சூழல் காரணமாக, டெல்லியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியுள்ளார். அங்கு அந்த சிறுமியை, அத்தையின் கணவர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

10 year old sketches her ordeal, court sends rapist uncle to jail in Delhi

இதுதொடர்பாக, டெல்லி கீழமை நீதிமன்றத்தில், சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு நடைபெற்று வந்தது. ஆனால், சிறுமி சொன்ன அடையாளங்களின்படி, குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது.

இதையடுத்து, குற்றவாளியை அடையாளம் காண நீதிபதி புதிய யோசனை ஒன்றை செய்தார். அதன்படி, சிறுமியின் கைகளில் ஓவியம் தீட்டும் பென்சில் தரப்பட்டது. இதை வைத்து, தான் நினைக்கும் அடையாளத்தின்படி, குற்றவாளியை வரைந்து காட்டும்படி, நீதிபதி சொன்னார்.

இதன்பேரில், சிறுமி தன்னை ரேப் செய்த மாமாவின் வரைபடத்தை அப்படியே வரைந்து கொடுத்தார். அதன் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

குற்றவாளி தான் இல்லை என்றும், சிறுமி தவறான அடையாளங்களை சொல்லி, தன்னை சிக்கவைப்பதாகவும் கூறி வந்த அந்த நபர், தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
10 year old sketches her ordeal, court sends rapist uncle to jail in Delhi. The judge who saw the sketch said that the same indicates her ordeal.
Please Wait while comments are loading...