For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் கோயில் நெரிசலில் சிக்கி 11 பேர் பலி.. 50 பேர் படுகாயம்!

By Shankar
Google Oneindia Tamil News

தியோகர்: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிலேபாகன் சிவன் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பிலேபாகனில் உள்ள துர்கா கோயிலுக்கு அருகில் உள்ளது பாபா பைத்யநாத் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் சாவன் மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் புனித நீர் அபிஷேகம் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் நாடு முழுவதிலிருமிருந்து பிலேபாகன் நகரில் குவிந்துள்ளனர்.

கடந்த வாரம் மட்டும் லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தக் கோயிலுக்கு வந்திருந்தனர். இன்று அதைவிட அதிகக் கூட்டம் குவிந்திருந்தது.

இன்று அதிகாலை 5 மணிக்கு தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, திடீரென நெரிசல் ஏற்பட்டது.

போலீசாரால் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. இந்த நெரிசலில் 11 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களை உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

இந்தக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு உயிர்கள் பலியாவது இது முதல் முறை அல்ல. கடந்த 2007-ம் ஆண்டு மூன்று பெண்கள் உள்பட 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Eleven people have lost their lives and 50 more injured in a stampede at a goddess Durga temple in Belabagan area of Jharkhand's Deoghar district, ANI report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X