டிராக்டர், மினி லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கதக்: டிராக்டரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகா சித்தனகொப்பா கிராமத்தை சேர்ந்த சேர்ந்த 45 பேர், தார்வாட் மாவட்டத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு வைபவம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு, டிராக்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். நேற்றிரவு, அவர்கள் பயணித்த டிராக்டர், கதக் மாவட்டத்தின் ஹுல்கொட்டி கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த மினி லாரி, இந்த டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாகினர். இதில் 7 பேர் பெண்கள். மேலும் 30 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications