ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து.. நேபாளத்தில் ஷாக்! 14 இந்தியர்கள் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் இந்திய பயணிகள் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 40 இந்தியர்கள் பயணித்த நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில், மார்ஸ்யாங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்துள்ளது. இது குறித்த தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறுகையில், "உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதிவெண் கொண்ட பேருந்து, ஐனா பஹாரா ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் 40 பேர் பயணித்ததாக தெரிய வந்திருக்கிறது. இதுவரை 14 பேரின் சடலங்களை மீட்டிருக்கிறோம். 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

நேபாள பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த, ஆயுதப்படை மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மாதவ் பாடேல் தலைமையிலான, 45 போலீஸார் கொண்ட குழு, விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications