14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன் - மனமுடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை
சிலிகுரி: மேற்கு வங்காளத்தில் காதலிப்பதாக கூறி தனது மகளை ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவள் விபச்சார விடுதியில் தள்ளப்பட்ட தகவலையும் அறிந்த தந்தை மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி நகரையடுத்துள்ள அம்பாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயின் மகளான 14 வயது சிறுமி ஒருவர்அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள்.

அதே கிராமத்தைச் சேர்ந்த பிண்டு பர்மன் என்பவனை அவர் காதலித்து வந்தார். பிண்டு, அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, கூச் பெஹார்க்கு அவரைத் தனியாக வரவழைத்தான்.
கடந்த மாதம் 14 ஆம் தேதி பிண்டுவை நம்பிப்போன அந்த இளம்பெண்ணை அவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து, சிலிகுரிக்கு அழைத்துச் சென்று பல நாட்களுக்கு அவளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் பணத்துக்காக அவளை விற்றுள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை அவளைக் காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் சிலிகுரி போலீசார் அவளை கூச் பெஹாரின் சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையிடம் ஒப்படைத்தனர்.
மகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மனமுடைந்துப்போன அவளது தந்தை துக்கம் தாங்க முடியாமல் மறுநாளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். தற்போது பிண்டுவையும், அவனது ஒரு நண்பரையும் கைது செய்துள்ள சிலிகுரி போலீசார், மேலும் இருவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications