அதிக மார்க் போடுவதாகக் கூறி 15 வயது சிறுமியை 3 வருடமாக சீரழித்த தலைமை ஆசிரியர்
ரைபூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைமை ஆசிரியரால் 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி கடந்த மாதம் குழந்தையை பெற்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் கண்டகாவ்ன் மாவட்டம் மகதியில் உள்ள பீமாபேடா பகுதியைச் சேர்ந்த 15 வயது பழங்குடியின சிறுமி ஒருவர் ஜகர்பரா அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியில் துவக்கப் பிரிவுன் தலைமை ஆசிரியராக உள்ளவர் ஜகர்பரா மாதவ் நாக்(52). அவர் தனது பள்ளியில் படித்த 15 வயது பழங்குடியின சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தேர்வில் அதிக மதிப்பெண் அளிக்கிறேன் என்று கூறி அவர் சிறுமியை சீரழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். இது குறித்து அறிந்த நாக் பணம் கொடுத்ததுடன் இது பற்றி யாரிடமாவது தெரிவித்தால் அவ்வளவு தான் என சிறுமியையும், அவரது குடும்பத்தாரையும் மிரட்டியுள்ளார்.
நாகின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை. கர்ப்பமான பிறகு சிறுமி பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த பிறகு அவர் இது குறித்து மகதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை தேடி வருகிறார்கள். தலைமை ஆசிரியரை தேடி அவரது சொந்த ஊரான தம்தாரி மாவட்டத்தில் உள்ள சிஹாவாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications