உ.பி.யில் ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள்..: சமாஜ்வாடி அரசு மீது மோடி தாக்கு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நிகழ்ந்துள்ளன..ஆனால் குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகாலத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை என்று குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது:
உத்தரப்பிரதேசத்தில் குண்டர்களாலும் துப்பாக்கிகளாலும்தான் அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் வெறுப்பு அரசியல்தான் நடைபெறுகிறது. நேதாஜி என்று அழைக்கப்படுகிறவர் (மோடி) வளர்ச்சியைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவரைப் பொறுத்தவரை வாக்கு அரசியல்தான் எல்லாமே..

இந்த மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் கடந்த 10 ஆண்டுகாலத்தில் குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை. உங்களை எங்களுடன் எப்படி ஒப்பிட முடியும்?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்பாக 20 ஆயிரம் வழக்குகள் ஒரு ஆண்டில் மட்டும் பதிவாகி இருக்கின்றன. அது சமாஜ்வாடி கட்சி.. மக்கள் விரோத கட்சி
இவ்வாறு மோடி பேசினார். மோடியின் இந்த கூட்டத்துக்காக 29 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 4,500 பேருந்துகள், 25 ஆயிரம் கார்கள், 50 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் மோடியின் கூட்டத்துக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications