செம்மர கடத்தல்: தொடரும் அட்டூழியம்! மேலும் 18 தமிழர்களை கைது செய்தது ஆந்திரா!
செம்மரம் வெட்ட சென்றதாக மேலும் 18 தமிழரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
சித்தூர்: செம்மரக் கடத்தல் வழக்கில் 22 பேரை விடுதலை செய்த கையோடு அடுத்தடுத்து தமிழர்களை கைது செய்து வெறியாட்டம் போடுகிறது ஆந்திரா. இன்றும் 18 தமிழர்கள் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திரா கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிட சென்ற 32 தமிழர்கள் ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரின் மீதும் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக வழக்குப்பதிவு செய்த அம்மாநில போலீசார் அவர்களை சித்தூர் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு படிப்படியாக ஜாமீன் வழங்கிய திருப்பதி நீதிமன்றம் நேற்று பொன்னுசாமி என்பவரை தவிர மற்ற 22 தமிழர்களை ஜாமீனில் விடுவித்தது. அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்குள் கடப்பாவில் மேலும் 35 தமிழர்களை நேற்று கைது செய்தது ஆந்திர போலீஸ்.
அவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இன்று கடப்பாவில் மேலும் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஆந்திரா போலீஸின் தொடரும் அட்டூழியம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications