ஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண்ணை கடத்தி.. நாசம் செய்து.. தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்!
19 வயது பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்
காந்திநகர்: உச்சக்கட்ட கொடூரம் என்பார்களே.. அது இதுதான்.. குஜராத்தில் இளம் பெண்ணை கடத்தி கொண்டு போய்.. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து.. அந்த பெண்ணை கொன்று.. அதன்பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய நாட்டில் நாளுக்கு நாள் வன்கொடுமைகள் பெருகி வருகின்றன.. நிர்பயா, கத்துவா சிறுமி.. உன்னாவ் பெண்.. ஹைதராபாத் டாக்டர்.. இன்னும் எத்தனையோ இளம்பெண்கள் காம கொடூரர்களால் காவு வாங்கப்பட்டுள்ளனர்.. இன்னும் உயிர்பலி எடுக்கும் அவலமும் தொடர்கிறது.
2020 வருட துவக்க நாளன்று.. இந்த சம்பவம் குஜாத்தில் நடந்துள்ளது.. ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமம்.. டிசம்பர் 31ம் தேதி.. 19 வயது இளம்பெண் அவர்.. பட்டியலினத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. தன் சகோதரியுடன் மொடாசா என்ற நகருக்கு சென்றார்.

புகார்
சகோதரி மட்டும் வீடு திரும்பிய நிலையில், ரொம்ப நேரமாகியும் அந்த பெண் மட்டும் வீடு திரும்பவில்லை.. குடும்பத்தினர் எங்கெங்கோ தேடி பார்த்தும் பெண் கிடைக்கவில்லை.. அதனால் விடிந்ததும் ஜனவரி 1-ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.

மிரட்டல்
அதனடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, பிமல் பர்வாட் என்பவர் காரில் கடத்தி சென்றதாகவும், யாரிடமும் சொல்லக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும் சொன்னார். இதன்பிறகு, ஜனவரி 3-ம் தேதி பெண்ணின் பெற்றோரை அழைத்து, "பிமலும் உங்க பொண்ணும் கல்யாணம் செய்துகொண்டிருப்பார்கள்.. சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

சடலம்
புகார் சொல்லி 4 நாள் ஆகியும் போலீசார் இது சம்பந்தமாக எந்த வழக்குமே பதிவு செய்ய காணோம்.. ஜனவரி 5-ம் தேதி இந்த கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் ஒரு பெண்ணின் சடலம் தொங்குகிறது என்ற தகவல் கிடைக்கவும் போலீசார் விரைந்தனர்..அப்போதுதான் அது காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது.

தாத்தா
இதையடுத்து உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பினால், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதற்கு பிறகு 7-ம் தேதி, உயிரிழந்த பெண்ணின் தாத்தா புகார் தரவும், அப்போதுதான் வழக்கு பதிவு செய்தனர். காரில் கடத்தி சென்றதாக கூறப்பட்ட பிமலிடம் விசாரணை நடந்தது. அப்போது பிமல், கடத்தப்பட்ட கார் மட்டும் என்னுடையது, ஆனால் பெண்ணை கடத்தியது என் நண்பர்கள் தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட், ஜிகார், இந்த 3 பேர்தான் என்றார்.

முற்றுகை
இதை கேட்டு கிராம மக்களே கொந்தளித்துவிட்டனர்.. தர்ணா, மறியல், முற்றுகை என அகமதாபாத் ஆஸ்பத்திரி முன்பு ஆவேசத்துடன் ஈடுபட்டனர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியிட வேண்டும், அந்த 3 பேரும் கைதாக வேண்டும்.. இவ்வளவு நாள் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காத அந்த இன்ஸ்பெக்டர் ரபாரி மீது நடவடிக்கை வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

குற்றவாளிகள்
தகவலறிந்து குஜராத் துணை டிஜிபி விரைந்து வந்து சமாதானம் பேசினார்.. குற்றவாளிகள் கைதாவார்கள் என்று உறுதி அளித்தார். இளம் பெண்ணை கடத்தி, பலாத்காரம் செய்து, கொன்று தூக்கிலும் தொங்க விட்டுள்ள இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications