நீட் தேர்வு அச்சம்: ராஜஸ்தான் கோட்டாவில் பயங்கரம்! ஒரே நாளில் 4 மணிநேரத்தில் 2 மாணவர்கள் தற்கொலை!
கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரே நாளில் 4 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வுக்கு அஞ்சி இந்த ஆண்டு இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாநில பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. மத்திய அரசு தரப்பு சிபிஎஸ்இ கல்வியை முன்வைக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற நிலைமையை ஒழித்து கட்டி அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

நீட் நுழைவுத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றால்தான் அரசு மருத்துவ கல்லூரிகளில் எளிதாக இடம் கிடைக்கும். நீட் தேர்வில் சொற்ப மதிப்பெண்கள் எடுத்தாலும் பல லட்சம் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துவிட முடியும். கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுக்கின்றனர். இதனாலேயே மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் அரியலூர் அனிதா தொடங்கி தாம்பரம் ஜெகதீஸ் வரை எண்ணற்ற மாணவர்கள் நீட் தேர்வினால் உயிரிழந்து போயிருக்கின்றனர். இதனால் நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு ஒருமித்த குரல் எழுப்பி வருகிறது.
இன்னொரு பக்கம், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்காக மட்டுமே ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. கோட்டா பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் பணம் கட்டி சேர்ந்துவிட்டால் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற கனவில் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கோட்டாவில் நீட் தேர்வில் வெற்றி பெறுவோமா? இல்லையா? என்ற அச்சத்தாலும் பாடங்கள் கடினமாக இருப்பதாலும் மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிற சம்பவங்கள் தொடருகின்றன. கோட்டாவில் நேற்று மட்டும் 4 மணிநேர இடைவெளியில் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு கோட்டாவில் மட்டுமே 22 மாணவர்கள் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications