நாடு முழுக்க விரைவில் போன் கால்கள் இலவசமாக்கப்படும்.. மேற்கு வங்கத்தில் மோடி வாக்குறுதி!
நாடு முழுக்க விரைவில் போன் கால்கள் இலவசமாக்கப்படும் என்று மேற்கு வங்கத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: நாடு முழுக்க விரைவில் போன் கால்கள் இலவசமாக்கப்படும் என்று மேற்கு வங்கத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கத்தில் கூச் பெஹார் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் அவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார்.
பாஜக சார்பாக மேற்கு வங்கத்தில் ஒரே வாரத்தில் நடக்கும் மூன்றாவது பெரிய பிரச்சார கூட்டம் ஆகும் இது. பிரதமர் மோடியின் இன்றைய பிரச்சார கூட்டத்தில் பெரிய அளவில் கூட்டம் நிரம்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மோடி மோடி
மோடி தனது பேச்சில், நீங்கள் மோடி மோடி என்று கத்துவதன் மூலம் இங்கு சிலரின் தூக்கம் கலைகிறது. யாரின் தூக்கம் தெரியுமா, ஸ்பீட் பிரேக்கர் மமதாவின் தூக்கம்தான். தேர்தல் ஆணையம் நான்கு மேற்கு வங்க போலீஸ் அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்து இருக்கிறது. அதனால் அவரின் தூக்கம் கலைந்து விட்டது.

மமதா பானர்ஜி
மேற்கு வங்க மக்களை மமதா பானர்ஜி ஏமாற்றிவிட்டார். அவர் தேசிய விரோதிகளை ஆதரிக்கிறார். தேசியத்துக்கு விரோதமான மக்களை அவர் வளர்க்கிறார். இதனால் மேற்கு வங்கத்தில் வளர்ச்சி மொத்தமாக குறைந்துவிட்டது. முன்னேற்றம் தடை பட்டுவிட்டது.

வேலைவாய்ப்பு மோசம்
மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்பு மிக மோசமாகிவிட்டது. கம்யூனிஸ்ட் அரசும், திரிணாமுல் அரசும் இல்லாத ஒரு அரசை பாஜக இங்கு உருவாக்கும். பாஜகவிற்கு மேற்கு வங்க மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நமது நாட்டின் காவலர்களை வலுப்படுத்தும்.

போன் கால்கள்
நாடு முழுக்க விரைவில் போன் கால்கள் இலவசமாக்கப்படும். அதேபோல் உலகிலேயே இந்தியாவில்தான் இணைய சேவை குறைவான விலையில் கிடைக்கும் நிலை உருவாகும். மனித கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மேற்கு வங்கத்திற்கும் நாங்கள் நிறைய நலத்திட்டங்களை கொண்டு வருவோம், என்று மோடி குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications
