பெங்களூரில் ஷூவை பிய்த்த 3 வயது சிறுவனை அடித்துக் கொன்ற உறவுக்காரர்
பெங்களூர்: பெங்களூரில் ஷூவை பிய்த்து, சட்டையை கிழித்ததற்காக 3 வயது சிறுவனை அவரை 16 வயது உறவுக்கார பையன் அடித்துக் கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாஸன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி ஷிவம்மா. அவர்களின் மகள் ப்ரித்வி, மகன் ப்ரீத்தம்(3). ரவிக்கு பெங்களூரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹுலிமாவு பகுதியில் எலக்ட்ரீஷியன் வேலை கிடைத்தது.

இதையடுத்து அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஹுலிமாவு பகுதியில் குடியேறினார். கடந்த திங்கட்கிழமை மதியம் ஷிவம்மாவின் 16 வயது உறவுக்கார பையன் ரகு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்து ப்ரீத்தமை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மாலையில் ப்ரீத்தம் என்ன செய்கிறான் என்று பார்த்துவிட்டு வருமாறு ஷிவம்மா தனது மகளை ரகுவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சிறுமி ஓடி வந்து ஹோட்டலில் சப்ளையர் வேலை செய்யும் ரகு ப்ரீத்தமை அடிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஷிவம்மா அந்த வீட்டிற்கு சென்றபோது ப்ரீத்தமை மாலை 5 மணிக்கு வீட்டில் விடுவதாக ரகு தெரிவித்துள்ளார். மாலை வீட்டிற்கு வந்த ப்ரீத்தம் மயங்கி விழுந்தான். உடனே அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் கைகள், முதுகு, வயிறில் அடிபட்டதால் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ரகுவை பிடித்து விசாரித்தபோது அவருக்கு பிடித்த ஷூ மற்றும் சட்டையை சிறுவன் கிழித்துவிட்டதால் அவனை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த ரகுவை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications