ஆந்திராவில் கார் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி- 6 பேர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனந்தபூர்: ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கார் கவிந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜூனா கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். கோவிலுக்கு சென்று விட்டு சென்று விட்டு திரும்பிய போது அனந்தபூர் மாவட்டம் கர்லிதின்னே அருகே வந்த போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

4 dies, 6 injured in road accident in Andhra Pradesh

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த 6 அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பெயர்கள் கந்தா, ஜோதிலட்சுமி, கார்த்திக், பவானி என்று தெரியவந்துள்ளது. விபத்து குறித்து அனந்தபூர் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
4 people were killed on Monday and six others injured car accident near Karlithenne in Anathapur district of Andhra Pradesh.
Please Wait while comments are loading...