ஆட்டோ டிரைவரை மணந்த என்ஆர்ஐ பெண் கொலை: போலீஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு ஆயுள்
டெல்லி: கனடாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்ததற்காக அவரது தாய் ஆள் வைத்து கொலை செய்த வழக்கில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கனடாவைச் சேர்ந்தவர் வெளிநாடு வாழ் இந்தியரான ஜஸ்விந்தர் கௌர். அவர் கடந்த 1999ம் ஆண்டு இந்தியா வந்தபோது சுக்விந்தர் என்ற ஆட்டோ டிரைவரை காதலித்தார். பின்னர் அவர் தனது பெற்றோர், தாய் மாமாவின் விருப்பத்திற்கு எதிராக சுக்விந்தரை 1999ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஜஸ்விந்தர் கனடா சென்றார்.
அவர் கனடாவில் இருந்தபோது அவரது தாய் ஜஸ்விந்தர் போன்று கையெழுத்துபோட்டு சுக்விந்தர் மீது போலி புகார் எழுதி அதை ஃபேக்ஸ் மூலம் பஞ்சாப் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அறிந்த ஜஸ்விந்தர் இந்தியாவுக்கு வந்து போலீசாரை சந்தித்து அது போலி புகார் என தெரிவித்தார். அதன் பிறகு அவர் இந்தியாவில் தனது கணவருடன் வசித்து வந்தார்.
தனது மகள் ஒரு ஆட்டோ டிரைவருடன் வாழ்வதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஸ்விந்தரின் தாய் பஞ்சாபைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஜோகிந்தர் சிங்குடன் சேர்ந்து மகளை கொல்ல திட்டமிட்டார். அவர் கூலிப்படையை வைத்து 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி ஜஸ்விந்தரை கொலை செய்தார். ஸ்கூட்டரில் கணவருடன் சென்றபோது ஜஸ்விந்தர் கொல்லப்பட்டார், சுக்விந்தர் படுகாயம் அடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் போலீஸ் அதிகாரி ஜோகிந்தர் சிங், கூலிப்படை ஆட்கள் அஷ்வனி குமார், அனில் குமார் மற்றும் ஒருவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜஸ்விந்தரின் தாய் மற்றும் அவரது தாய் மாமாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications