For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு பக்கம் அபிநந்தன்.. மறுபக்கம் தீவிரவாதிகளை அனுப்பிய பாக்.! 4 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: அபிநந்தனை வாகா எல்லையில் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்த அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 4 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 40 பேரை கொன்றனர்.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதையடுத்து தீவிரவாதிகளுக்கு ஆதவாக பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவிற்குள் தனது போர் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்த முயன்றது.

வெல்கம்ஹோம் அபிநந்தன்.. எல்லா டிவியிலும் சிங்கக் குட்டியின் முகம்தான்! வெல்கம்ஹோம் அபிநந்தன்.. எல்லா டிவியிலும் சிங்கக் குட்டியின் முகம்தான்!

ஆவேசம்

ஆவேசம்

இதை தடுக்க முயன்றபோது, இந்திய விமானி, அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்திய ராணுவம் மேலும் ஆக்ரோஷமானது. சர்வதேச அளவிலும் பாகிஸ்தானை அனைத்து நாடுகளும் கைவிட்டன.

நல்ல பிள்ளை

நல்ல பிள்ளை

இதையடுத்து நல்ல பிள்ளை போல, அபிநந்தனை உடனடியாக விடுதலை செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மாலை 5.20 மணிக்கு, வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம், அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

உலக அளவில் முதலிடம் பிடித்த அபிநந்தன் ஹேஸ்டேக்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம் உலக அளவில் முதலிடம் பிடித்த அபிநந்தன் ஹேஸ்டேக்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

ஆனால், அதேநேரம், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இந்திய படைகள் மீது காஷ்மீரின் குப்வாரா மாவட்ட எல்லையில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

கடமை பாக்கி இருக்கிறது

கடமை பாக்கி இருக்கிறது

அபிநந்தனை மீட்பதோடு இந்திய கடமை முடியவில்லை. எதற்காக தாக்குதலை இந்தியா ஆரம்பித்ததோ, அதற்கான தேவை இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பாகிஸ்தானின் நாடகத்தை நம்பினால் இந்திய ராணுவத்தின் மீதான தாக்குதல் தொடரும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

English summary
Four security personnel, including an officer, have died during an encounter with terrorists in Jammu and Kashmir's Kupwara district today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X