4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை!
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே தற்போது காஷ்மீர் எல்லையில் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. பாகிஸ்தான் இதுவரை 2000 முறைக்கும் மேல் அமைதி ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி உள்ளது.
இன்றும் அமைதி உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

ஏன் தாக்குதலை
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது கடும் கோபத்தில் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாத இயக்கங்களும் இந்தியா மீது கடும் கோபத்தில் உள்ளது . இதனால் ஜம்முவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயல்வதாக தகவல்கள் வெளியானது.

எங்கு முறியடிப்பு
இந்த நிலையில்தான் பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நுழைய முயல்கிறார்கள். அங்கு முகாம்களை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்று இந்திய ராணுவத்திற்கு தகவல் வந்தது.

தாக்குதல் நடந்தது
இதனால் டாங்தார் மற்றும் நீலம் வாலி பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவமும் அங்கு பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. காலையில் இருந்து இந்த சண்டை நடந்து வருகிறது.

கருவிகள்
அங்கு இந்திய ராணுவம் தற்போது டாங்கிகள், நவீன போர் கருவிகள் ஆகியவற்றை குவித்து வருகிறது. அதேபோல் அர்டில்லரி வகை பெரிய துப்பாக்கிகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடுமையான, தீவிரமான தாக்குதல்களை எளிதாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காலி
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 தீவிரவாத முகாம்கள் அங்கு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications