மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் எஸ்கேப்.. 40 வயது பெண்ணுக்கு வந்த விபரீத ஆசை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் வீட்டில் இருந்து 40 வயது பெண் இழுத்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசிய நிலையில் காதல் வயப்பட்டதால் குடும்பத்தினரை ஏமாற்றி எஸ்கேப் ஆன இந்த ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி பெயர் காஜல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 40. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர். அவரது பெயர் ரமணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

marriage uttar pradesh

இந்நிலையில் தான் ரமணிக்கு திருமணம் செய்ய மணி - காஜல் தம்பதி முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் மாப்பிள்ளை தேடினர். பக்கத்து கிராமத்தை சேர்ந்த சுஷாந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், ரமணிக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

சுஷாந்த் - ரமணி திருமணம் வரும் ஏப்ரல் 16ம் தேதி நடத்த இருகுடும்பத்தினரும் முடிவு செய்தனர். வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இதற்கிடையே தான் சுஷாந்த், வருங்கால மனைவி ரமணியிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். அதன்பிறகு ரமணியின் தாய் காஜல், தந்தை மணி ஆகியோரிடம் அவ்வப்போது பேசி நலம்விசாரித்தார்.

இந்நிலையில் தான் கடந்த 6ம் தேதி திடீரென்று சுஷாந்த் தனது வீட்டில் இருந்து மாயமானார். அவர் ‛‛என்னை யாரும் தேட வேண்டாம். என்னை யாரும் தொடர்பு கொள்ள முயல வேண்டாம். நான் லாங்க் டிராவல் செய்யப்போகிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சுஷாந்தின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சுஷாந்தின் தந்தை மணப்பெண் ரமணி வீட்டுக்கு போன் செய்து, ‛‛சுஷாந்த் அங்கு வந்தாரா?'' என்று கேட்டனர். அதற்கு அவர்கள் ‛‛இல்லை.. என்ன விஷயம்'' என்று கேட்டனர். அதற்கு சுஷாந்தின் தந்தை, சுஷாந்த் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறினார். அப்போது தான் அவர்களும் ஒரு விஷயத்தை தெரிவித்தனர். அதாவது ரமணியின் தாய் காஜலும் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை எடுத்து கொண்டு மாயமானதாக கூறினர்.

இதனால் சுஷாந்தும், மணப்பெண் ரமணியின் தாய் காஜலும் ஓடிப்போய் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதோடு காஜலை, சுஷாந்த் இழுத்து சென்றதாக அவர் கணவர் மணி மத்ராக் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இருவரும் எங்கு உள்ளனர்? என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுபற்றி காஜலின் கணவர் மணி கூறுகையில்,, ‛‛எனது மகளான மணப்பெண்ணை விட என் மனைவி காஜலுடன் தான் சுஷாந்த் அதிக நேரம் பேசி கொண்டிருப்பார். மணிக்கணக்கில் இருவரும் பேசினர். இப்போது இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். எனது வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், நகைகள் என்று மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து கொண்டு மனைவி காஜலை, சுஷாந்த் இழுத்து கொண்டு சென்றுவிட்டார். இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.

திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை வருங்கால மாமியாரை இழுத்து கொண்டு ஓடிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+