For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புனே திரைப்படக்கல்லூரியில் புகுந்து நள்ளிரவில் 5 மாணவர்களை கைது செய்த போலீசார்!

Google Oneindia Tamil News

புனே: புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையத்திற்குள் இன்று அதிகாலை 1.15 மணிக்கு நுழைந்த போலீசார் 5 மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையத்தின் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.கவின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது கல்லவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர்.

கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

English summary
In a post-midnight crackdown at the Pune film institute FTII, five students were arrested and taken to a police station after the institute's director, Prashant Pathrabe lodged a complaint against them for detaining him on campus on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X