ஆந்திராவில் மீண்டும் செம்மரக் கட்டைகள் கடத்தல் - தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பிடிபட்டன. இவற்றைக் கார்களில் கடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சித்தூர் மாவட்டம் கார்வேட் நகரில் அம்மாநில வனத்துறையினர் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையில், 3 கார்களில் கடத்தி வரப்பட்ட 40 செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர்.
இதேபோல் எஸ்.ஆர். புரம் கிராமம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, காரில் கடத்தி வரப்பட்ட 16 செம்மரக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications