யார் கூப்பிட்டும் வரவில்லை.. அம்மா இறந்தது தெரியாமல் அருகிலேயே படுத்து இருந்த சிறுவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தாய் இறந்தது தெரியாமல் அருகிலேயே படுத்து உறங்கிய சிறுவன்- வீடியோ

  ஹைதராபாத்: இந்தச் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்து இருக்கிறது. கத்தேதான் என்ற பகுதியை சேர்ந்த சமீனா சுல்தானா என்ற பெண் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து உள்ளார்.

  இவர் மரணம் அடைந்தது தெரியாமல் அவரது மகன் அருகிலேயே படுத்து கிடந்துள்ளான். சோயப் என்ற அந்தச் சிறுவனுக்கு 5 வயது மட்டுமே நிரம்பி இருக்கிறது.

  தற்போது அவன் தாயின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கணவன் இல்லை

  கணவன் இல்லை

  சமீனாவை அவரது கணவன் அயூப் மூன்று வருடங்களுக்குப் முன்பே பிரிந்து விட்டார். அப்போதில் இருந்து இவர் தனியாக மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த அயூப்தான் அவரை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்.

  யாருமே இல்லை

  யாருமே இல்லை

  மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர் அங்கு இருந்து சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை பார்க்கவும் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் 3 மணிநேரம் சிகிச்சை பார்க்க ஆள் இல்லாமல் அங்கேயே மரணம் அடைந்து இருக்கிறார்.

  படுத்து இருந்தான்

  படுத்து இருந்தான்

  இந்த விஷயம் தெரிந்து தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அங்கு வந்துள்ளார்கள். ஆனால் அந்தப் பெண் அதற்கு முன்பே மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மகன் சோயப் அருகிலேயே படுத்து தூங்கி உள்ளான். யாரும் எழுப்பியும் அவன் எழுந்து வர மறுத்துள்ளான்.

  2 மணிநேரம்

  2 மணிநேரம்

  மேலும் அந்தச் சிறுவன் தாயுடன் 2 மணிநேரம் அப்படியே படுத்து கிடந்துள்ளான். பின் வேறு வார்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சமாதானப்படுத்தி, தாயின் உடலைப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். பின் அவனைப் பெண்ணின் குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  5-year-old boy named Shoaib sleeps next to his dead mom Sameena Sultana, 36, in Hyderabad. She died due to heart attack.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற