50 ஆயிரம் பேரை காப்பாற்றுங்கள்... ஹெலிகாப்டர் வராவிட்டால் நிலைமை மோசமாகும்... செங்கனூர் எம்எல்ஏ
திருவனந்தபுரம்: வெள்ளத்தால் வெளியேற முடியாமல் தவிக்கும் 50 ஆயிரம் பேரை காப்பாற்றுங்கள் என்று செங்கனூர் தொகுதி எம்எல்ஏ சஜி செரியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் வயநாடு, செங்கனூர் , ஆலப்புழா, பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிப்போரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் வெள்ளம் பாதித்த 14 மாவட்டங்களில் செங்கனூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் மூழ்கியது
இந்நிலையில் செங்கனூர் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் 50 ஆயிரம் பேர் சிக்கித் தவித்து வருவதாக செங்கனூர் எம்எல்ஏ சஜி செரியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் செங்கனூர் தொகுதியில் உள்ள 4 பஞ்சாயத்துகள் முற்றிலும் மூழ்கிவிட்டன.

கட்டடங்களும் மூழ்கும் நிலை
எடநாடு, பாண்டநாடு, திருவாண்டூர் மற்றும் நாடகா ஆகிய பகுதிகளில் நிலை மோசமாக உள்ளது. மேலும் பாண்டநாட்டில் நூற்றுக்கணக்கானோர் கட்டடங்களில் சிக்கியுள்ள நிலையில் அந்த கட்டடங்களும் ஏறக்குறைய மூழ்கும் நிலையில் உள்ளன.

சாலைகள் துண்டிப்பு
செங்கனூரை இணைக்கும் மங்கலம், புதேன்காவு, ஆராட்டுபுழா, மண்ணார் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 5 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 50 ஆயிரம் பேராவது வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர்களை கொண்டு காப்பாற்ற வேண்டும்.

சஜி செரியன்
உணவு மற்றும் தண்ணீரின்றி மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு உணவு பொருட்கள், மாத்திரைகள், நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் அளிக்கப்படுகிறது. இவர்களை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றாவிட்டால் நிலைமை மோசமாகும் சூழல் ஏற்படும். எங்கள் தொகுதி மக்களை எப்படியாயினும் காப்பாற்றி விடுங்கள் என்று சஜி செரியன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications