For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாம்: 8 அமைப்புகளின் 644 தீவிரவாதிகள் சரண்- 177 துப்பாக்கிகள் பறிமுதல்

Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாமில் 8 அமைப்புகளின் 644 தீவிரவாதிகள் இன்று சரணடைந்தனர். அவர்களின் 177 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

அஸ்ஸாமில் தனிநாடு, தனி சுயாட்சி பகுதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்து ஏராளமான ஆயுத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அண்டை நாடுகளான சீனா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றில் முகாம்கள் அமைத்து இந்தியாவுக்குள் பல்வேறு சட்டவிரோத செயல்படுகளில் இந்த இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

644 militants of eight banned outfits surrender in Assam

இதனால் மத்திய அரசு பல அமைப்புகளை தடை செய்துள்ளன. தற்போது தடை செய்யப்பட்ட 8 அமைப்புகளின் 644 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.

உல்ஃபா, என்டிஎஃப்பி, ஆர்என்எல்எஃப், கே.எல்.ஓ, சிபிஐ(மாவோயிஸ்ட்) என்.எஸ்.எல். ஏ. ஏபிஎஃப். என்.எல்.எஃப்..பி ஆகியவற்றை சேர்ந்த தீவிரவாதிகள் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் சரணடைந்தனர்..

பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை.. ராமானுஜ ஜீயர் பரபரப்பு பேச்சு பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை.. ராமானுஜ ஜீயர் பரபரப்பு பேச்சு

நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் சரணடைந்திருப்பது தற்போதுதான் நடைபெற்றுள்ளது, இது குறித்து கருத்து தெரிவித்த அஸ்ஸாம் டிஜிபி பாஸ்கர் ஜோதி மகந்தா, அஸ்ஸாம் போலீஸ் வரலாற்றில் இன்று மிக முக்கிய நாள். 644 தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளனர் என்றார்.

English summary
644 militants of eight banned insurgent outfits surrendered in Assam along with 177 arms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X