சாலையில் தறிகெட்டு ஓடிய தெலுங்கானா துணை முதல்வரின் எஸ்கார்ட் கார்- 7 பேர் காயம்
வாரங்கல்: தெலுங்கானா துணை முதல்வரின் பாதுகாப்பு வாகனம், டயர் பஞ்சராகி சாலையில் தறி கெட்டு ஓடி விபத்து உண்டாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் துணை முதல்வராக இருப்பவர் ராஜய்யா. ஹனுமன்கோண்டா சென்றிருந்த ராஜய்யா, யஷ்வந்தபூர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரின் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் டயர் பஞ்சரானது. இதில் நிலைகுலைந்தது அந்தக் கார். டிரைவர் எவ்வளவோ சமாளிக்க முயன்றும், முடியாமல் அருகில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், மற்றும் எதிர்ப்புறம் வந்த சில வாகனங்கள் மீது அந்தக் கார் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப் பட்டனர். சிகிச்சைக்குப் பின் அவர்கள் வீடு திரும்பி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications