ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் உள்பட 74 பேர் கைது
கடப்பா: செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் உள்பட 74 பேரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப் பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, செம்மரம் கடத்தலைத் தடுக்க ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செம்மரம் கடத்தியதாக 74 பேரை ஆந்திர மாநிலம் கடப்பா போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்ற 73 பேரும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கைதான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடப்பா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருமண விழாவிற்கு வந்ததாகக் கூறி செம்மரக் கட்டை கடத்தலில் ஈடுபட்டதாகவும் கடப்பா போலீசார் கூறியுள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications