நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக் கூடிய இந்திய நகரங்களின் பட்டியல்.. மேலும் 81 நகரங்கள் சேர்ப்பு
டெல்லி: இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக் கூடிய நகரங்கள் வரிசையில் மேலும் 81 நகரங்களைச் சேர்த்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக் கூடிய நகரங்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
இதில் எட்டு நகரங்கள் மிக மிக பாதிப்புகளை சந்திக்கக் கூடிய நகரங்கள் வரிசையில் சேர்ந்துள்ளன. இது மார்ச் 16ம் தேதி கணக்காகும்.
2002ம் ஆண்டு இந்தியாவில் குவஹாத்தி, ஸ்ரீநகர் ஆகியவை மட்டும்தான் மிக மிக பாதிப்புகளை சந்திக்கக் கூடிய பகுதிகள் வரிசையில் இடம் பெற்றிருந்தன. இதை 5வது மண்டலம் என்பார்கள். அதாவது மிக மிக அதிக அளவில் அபாயம் உள்ள பகுதிகள் இவை.

5வது மண்டலம்...
ஆனால் தற்போது ஜோர்ஹாட், சதியா, தேஸ்பூர், குஜராத்தின் பூஜ், பீகாரின் தர்பங்கா, மணிப்பூரின் இம்பால், நாகாலாந்தின் கோஹிமா, ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி ஆகியவையும் சேர்ந்துள்ளன். ஒட்டுமொத்த வட கிழக்கு இந்தியாவும் அபாயகரமான 5வது மண்டலப் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

38 நகரங்கள்...
இந்தியத் துணைக் கண்டத்தின் 60 சதவீத பகுதிகள் நிலநடுக்க அபாயம் கொண்டவையாகும் என்று இந்தியா ஸ்பெண்ட்ஸ் ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. இதில் 38 நகரங்களில் நகரம் ஒன்றிற்குத் தலா 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவை 3, 4, 5 வது மண்டலத்தின் கீழ் வருகின்றன.

ஆபத்தான இமயமலைப் பகுதி...
இமயமலைப் பகுதியில் மிக மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் நிச்சயம் வரும் என்று பலரும கணித்துக் கூறியுள்ளனர். 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமாக இது இருக்கும் எந்றும் கூறப்படுகிறது. ஆனால் அது எப்போது வரும் என்றுதான் யாராலும் கணிக்க முடியவில்லை.

கோண்டவானா...
வட இந்தியாவும், இமயலைத் தொடரும் மிகவும் இலகுவான பகுதிகளாக, அசைந்து கொடுக்கக் கூடியவையாக உள்ளன. கடந்த காலத்தில் இந்தியாவானது அப்போதைய துணைக் கண்டமான கோண்டவானாவிலிருந்து பிரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மனிதர்களே கூட பிறந்திருக்கவில்லையாம்.

வளரும் இமயமலை...
கடந்த 50 மில்லியன் ஆண்டுகளாக, இந்திய, யூரேசிய நிலத் தட்டுக்கள் சிக்கலாகவே இரு்து வருகி்றந. இந்திய நிலத் தட்டானது யூரேசிய தட்டுக்குக் கீழ் நோக்கி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இமயலையானது வளர்ந்து கொண்டே செல்கிறது.

392 நிலநடுக்கங்கள்...
கடந்த 2015ல் 3 ரிக்டருக்கும் மேலான 392 நிலநடுக்கங்கள் நடந்துள்ளன என்று மத்திய அரசு சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 136 நிலநடுக்கங்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன. அதில் 114 நிலநடுக்கங்கள், 5வது மண்டலத்திலும், 14, 4வது மண்டலத்திலும், 5, 3வது மண்டலத்திலும், 3 2வது மண்டலத்திலும் நிகழ்ந்துள்ளன.

8000 பேர் பலி...
கடந்த 2015ல் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேபாளத்தை உலுக்கியது. இதில் 8000 பேர் உயிரிழந்தனர். 20,000ககும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியா முழுவதும் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் 102 பேர் உயிரிழந்தனர். 13,000 வீடுகள் சேதமடைந்தன.

குஜராத் நிலநடுக்கம்...
நவீன இந்தியாவில் நிகழ்ந்த மிகப் பெரிய நிலநடுக்கம் 2001ல் குஜராத்தில் நடந்த பூகம்பம்தான். அதில் 20,000 பேர் கொல்லப்பட்டனர்.

சுனாமி...
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியானது, 9.3 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். இந்த நிலநடுக்கத்தால் பர்மா பகுதியல் உள்ள நிலத் தட்டானது மிகப் பெரிய பாதிப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் மிகப் பெரிய அளவில் கடல் நீர் நிலத்திற்குள் பாய்ந்து 14 நாடுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாக காரணமாக அமைந்தது.

தலைநகருக்கு ஆபத்து...
இந்தியாவின் பெருநகரங்கள் இதுவரை பெரிய அளவிலான நிலநடுக்கங்களை கண்டதில்லை. டெல்லி இதில் அபாயகரமான 5வது மண்டலத்தின் கீழ் இருக்கிறது என்றாலும் கூட பெரிய நிலநடுக்கம் இதுவரை ஏற்பட்டதில்லை. மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகியவை 3வது மண்டலத்தின் கீழ் உள்ளன.

பீகார் நிலநடுக்கம்...
1934ம் ஆண்டு பீகாரில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு மும்பையிலிருந்து லாசா வரை இருந்தது. பீகார் மாநிலத்தில் மிகப் பெரிய கட்டடங்கள் அதில் தரைமட்டமாகின. கொல்கத்தாவில் பலர் உயிரிழந்தனர். அதன் அளவு 8.4 ரிக்டராக இருந்தது. 8100 பேர் இறந்தனர். இந்த நிலநடுக்கம் குறித்து மகாத்மா காந்தி கூறுகையில், "தீண்டாமைக் கொடுமைக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது" என்றார்.
-
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா! -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications