For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் ராணுவ ஆட்சி தேவை.. பெரும்பான்மை மக்கள் கருத்து இதுதான்.. ஷாக்கிங் சர்வே!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என அதில் பெரும்பான்மையோர் நினைப்பதாகவும் சர்வே ஒன்று தெரிவிக்கிறது.

"பியூ ரிசர்ச் அமைப்பு, நடத்திய சர்வேயில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012ம் ஆண்டு முதல் 6.9 சதவீதத்திற்கும் குறையாமல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 85 சதவீத மக்கள் மோடி அரசை முழுமையாக நம்புகிறார்கள்" என்று முத்தாய்ப்பு கொடுக்கிறது இந்த ஆய்வு.

பல்வேறு நாடுகளிலும் அந்த நாட்டு அரசுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது பியூ அமைப்பு.

ராணுவ ஆட்சி

ராணுவ ஆட்சி

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் நான்கில் ஒருவராவது, ஏறத்தாழ 27 சதவீதம் பேர், வலிமையான தலைவர்தான் நாட்டுக்கு தேவை என கூறியுள்ளனர். 55 சதவீதம் பேர் ராணுவ ஆட்சி தேவை என கூறியுள்ளனர். இவர்கள் கூறிய வார்த்தைகள் வெவ்வேறு வகையாக இருப்பினும், அவர்கள் கூற வந்த கருத்து, ராணுவ ஆட்சி என்பதுதான்.

ரஷ்ய நிலை

ரஷ்ய நிலை

அதேநேரம், ரஷ்யாவில் 48 சதவீதம் பேர் வலிமையான தலைவர் வேண்டும் என்றும், அரசு மீது தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளனர். அரசு மீது நம்பிக்கை கொண்டோர் ரஷ்யாவை காட்டிலும் இந்தியாவில் அதிகம்.

டெக்னிக்கல் நிபுணர்கள்

டெக்னிக்கல் நிபுணர்கள்

ஆசிய பசிபிக் நாடுகளில், அரசில் நல்ல டெக்னிக்கல் நிபுணர்கள் இருக்க வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்பும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஆஸ்திரேலிய நினைப்பு வேறு

ஆஸ்திரேலிய நினைப்பு வேறு

வியட்னாமில் 67 சதவீதம், இந்தியாவில் 65 சதவீதம், பிலிப்பைன்சில் 62 சதவீதம் மக்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆட்சியில் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்று நினைக்கிரார்கள். ஆனால் ஆஸ்திரேலிய மக்களின் எண்ணம் வேறு மாதிரி உள்ளது. 57 சதவீத ஆஸி. மக்கள், அது ஆட்சி நடத்தும் நடைமுறை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

முதியவர்கள் ஆதரவு ஜனநாயகத்திற்கு

முதியவர்கள் ஆதரவு ஜனநாயகத்திற்கு

55 சதவீத இந்தியர்களும், 52 சதவீத தென் ஆப்பிரிக்கர்களும், தங்கள் நாட்டுக்கு ராணுவ ஆட்சிதான் சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளபோதிலும், அதில் 50 வயதுக்கு மேற்பட்டோர் ஜனநாயகமே சிறந்தது என்று பதில் அளித்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

English summary
A new survey has suggested that more than four-fifths of Indian citizens trust the government, but the majority is also in support of a military rule and autocracy. These revelations were made by a new survey by the Pew Research Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X