பிறந்தநாள் பார்ட்டி அதிர்ச்சி! சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? திரிணாமுல் காங். பிரமுகர் மகன் கைது
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
மம்தா ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து மாநிலத்தில் வன்முறைகள் அதிகரித்து வருவதாக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டோடு பத்து பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர்கம் விளக்கம் கேட்டதோடு, முக்கிய விசார்ணை அமைப்புள் களமிறங்கி விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பிறந்தநாள் பார்ட்டி
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சனிக்கிழமையன்று புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எஃப்.ஐ.ஆர் படி, திங்களன்று TMC பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் ஏற்பாடு செய்த பிறந்தநாள் விழாவிற்கு சிறுமி சென்றுள்ளார். அவர் ஒன்பதாம் வகுப்பு மாணவி என்றும் கூறப்படுகிறது. பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பியபோது பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உள்ளூர் சுடுகாட்டில் அவசரமாக அவரது உடல்
தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அந்த பெண் தனியாக விருந்துக்கு சென்றாரா அல்லது சக நண்பர்கள் உடன் சென்றாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் விருந்தில் மது அருந்தும்படி வற்புறுத்தப்பட்டதாகவும், ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசாரிடம் கூறினார்.

குற்றவாளி கைது
மேலும் சோஹல் தன்னை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சோஹலை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில், அவரது தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான சமர் தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications