3 மாநிலங்களை அதிர வைத்த பாலியல் தொழில்.. மொத்த நெட்வொர்க்கையும் காலி செய்த 16 வயது சிறுமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மொத்த பாலியல் தொழில் நெட்வொர்க்கையும் காலி செய்த 16 வயது சிறுமி!- வீடியோ

  டெல்லி: மூன்று மாநிலங்களில் பாலியல் தொழில் செய்து வந்தவர் சோனு பஞ்சபான். இந்த பெண்ணை கைது செய்தும் போலீஸ் இவருக்கு எதிராக சாட்சியம் இல்லாமல் திணறி வந்தது.

  ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும் இவர் சாட்சிகள் இல்லாமல் எளிதாக தப்பி இருக்கிறார். இந்த நிலையில் 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் டெல்லியில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் இவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.

  இவரது வாக்குமூலத்தை விட அதற்கான காரணம் போலீசை மிகவும் சிலிர்ப்படைய வைத்து இருக்கிறது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த வழக்கு ஒன்றும் தீர்க்கப்பட்டு இருக்கிறது.

  பாலியல் தொழில்

  பாலியல் தொழில்

  டெல்லி, உத்தர பிரதேஷ், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிகப்பெரிய பாலியல் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்தவர் சோனு பஞ்சபான். இவரை கடந்த 2011ம் டெல்லி போலீஸ் கைது செய்தது. ஆனால் இவருக்கு எதிராக சரியான சாட்சியம் எதுவும் இல்லை என்று 2014ல் இவர் விடுவிக்கப்பட்டார். அதற்கு பின் கைது செய்யப்பட்டு சாட்சியம் இல்லாமல் மீண்டும் விடுவிக்கப்பட்டார்.

  காணவில்லை

  காணவில்லை

  சோனு பஞ்சபான் 2011ல் வழக்கு பதியப்பட்ட பின் 2012ல் ஒரு 16 வயது சிறுமி சாட்சியம் அளிக்க முன்வந்தார். அதன்படி அவர் போலீசிடம் சோனு பஞ்சபான் செய்த அனைத்து குற்றங்கள் குறித்தும் கூறினார். தான் அங்கு அடிமையாக இருந்ததாகவும், பாலியல் தொழிலில் சோனு பஞ்சபான் தன்னை ஈடுபடுத்தியதாகவும் கூறினார். ஆனால் இந்த சிறுமியின் வாக்குமூலம் வெளியாகும் முன்பே அவர் தலைமறைவானார்.

  பழைமையான வழக்கு

  பழைமையான வழக்கு

  இந்த சிறுமி தலைமறைவான பின் போலீஸ் அந்த சிறுமியை குறித்து தீவிரமாக விசாரிக்க தொடங்கியது. அதன்படி 2009ல் இந்த பெண் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அந்த சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 11 பேரிடம் கை மாறி கடைசியாக சோனு பஞ்சபானிடம் வந்து சேர்ந்து இருக்கிறார். சோனு பஞ்சபான்தான் இவரை மிகவும் கொடுமை படுத்தி இருக்கிறார். சோனுவிற்கு பயந்தே இவர் தலைமறைவாகி இருக்கிறார்.

  போலீஸ் கண்டுபிடித்தனர்

  போலீஸ் கண்டுபிடித்தனர்

  இவ்வளவு நாளாக தலைமறைவாக இருந்த அந்த சிறுமியை போலீஸ் தற்போது கண்டுபிடித்து இருக்கிறது. அந்த சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த 6 மாதமாக திட்டம் தீட்டி போலீஸ் சோனு பஞ்சபானை கைது செய்தது. தற்போது சோனு பஞ்சபானுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டு இருக்கிறது. அவர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதனால் 3 மாநிலங்களில் நடந்த பாலியல் தொழில் பெரிய அளவில் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A 16 year old girl helped police to nab Sonu Punjaban. She is the sex racket head in Hariyana, Delhi and Uttar Pradesh. Police planned six months to nab Sonu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற